Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st April 2020 22:18:24 Hours

கோவிட் – 19 க்கு எதிரான இலங்கையின் தாக்கம் தொடர்பான தற்போதைய நிலைமைகளை இராணுவ தளபதி பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு விளக்கம்

இன்று பிற்பகல் (21) ஆம் திகதி கோவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் இலங்கையிலுள்ள தூதரகங்களிலுள்ள ஒன்பது வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோச பிரதிநிதிகளுக்கு இலங்கையில் தற்போதைய கொரோனா தொற்று நோய் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கங்களை தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகாராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கெப்டன் சீன் அன்வின், பங்களாதேசத்தின் உயர்ஸ்தானிகாராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சையத் எம், இந்திய உயர்ஸ்தானிகாராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஹாகு புக்காரா, ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் இஸ்மைல் நசீர், மாலைதீவு உயர்ஸ்தானிகாராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகாராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சஜாட் அலி, ரஷியா தூதரகத்தின் கேர்ணல் டெனிஷ் 1 ஸ்கோடா, பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஜக்கிய இராஜ்ஜியத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டேவிட், ஜக்கிய இராஜ்ஜியத்தின் அஷ்மன், அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ட்ரேவிஷ் ரே கொக்‌ஷ் போன்றோர் இணைந்து கொண்டனர்.

இராணுவ தளபதியின் உரையின் போது, இந்த இயல்பு பற்றிய ஒரு பயனுள்ள கலந்துரையாடலுக்கு வருகை தந்த வெளிநாட்டு ஆலோசகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.,மேலும் உரையாற்றுகையில் COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆயுதப் படைகள் சிறப்பான பாத்திரங்களை வகிக்கின்றனர். இதேபோல், பங்களாதேஷ பாதுகாப்பு ஆலோசகர் ஊரடங்கு உத்தரவின் போது பல்வேறு உணவு வகைகளை தெருக்களில் கடந்து செல்வது மற்றும் ஆயுதப்படைகளின் மூலோபாய அணுகுமுறைகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அத்துடன் இராணுவ தளபதி அவர்கள் இந்த தூதரக பிரதிநிதிகளுக்கு ஏதாவது தேவைகள் ஏற்படுமாயின் தன்னை தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பானது பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு விவகார அமைச்சின் வேண்டுகோளின் பேரில் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க மற்றும் கோவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் கபில தொலஹே அவர்கள் இணைந்து கொண்டனர். latest Running Sneakers | Shop: Nike