Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th April 2020 20:01:17 Hours

217 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு செல்லல்

இராணுவத்தினரினால் நிர்வகிக்கபபட்டுவரும் குண்டசாலே தனிமைப்படுத்தப்பட்ட மையம், கடற்படை நிர்வகிக்கும் பூச தனிமைப்படுத்தப்பட்ட மையம் இமற்றும் விமானப்படை நிர்வகிக்கும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து மொத்தமாக 217 நபர்கள் இரண்டு வார கால தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் இன்று காலை (6) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர்.

இராணுவத்தினால் வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகளுடன் காலி,கொழும்பு,கண்டி,மாத்தறை, அநுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களை நோக்கி புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர், வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து புறப்பட்ட அவர்களை வழியனுப்பி வைத்தனர். best Running shoes | Nike Shoes