Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2020 20:35:32 Hours

வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தாருக்கு 66 ஆவது படைப் பிரிவினரால் உதவிகள்

கோவிட் – 19 தொற்று நோயை கட்டுப்படுத்தும் முகமாக நாடாளவியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் ஊரடங்க சட்டத்தினால் கஸ்ட்டத்திற்கு உள்ளாகியுள்ள வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 66 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த பிரதேசத்திலுள்ள சிவநகர், பள்ளிகாடு, பரந்தன், கொள்ளகாரச்சி மற்றும் வெட்டிவாகுரிச்சி கிராமத்திலுள்ள வாழ்வாதாரத்தில் பின் தங்கிள 26 குடும்ப அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இவர்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த பணிகள் இராணுவத்திலுள்ள 24 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 11 (தொ) கஜபா படையணி, 5 (தொ) பொறிமுறை காலாட் படையணி மற்றும் 2 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 66 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி விஜயசுந்தர அவர்களது பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் எஸ்.கே முதியோர் இல்லத்தின் தலைவர் திரு எஸ்.கே நாதன் அவர்களது அனுசரனையின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்களது தலைமையில் பூனகிரியிலுள்ள வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு உலருணவு பொருட்கள் 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். url clone | Womens Shoes Footwear & Shoes Online