Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th March 2020 20:20:29 Hours

விஷேட படையணியினரால் அவசர இரத்த சேமிப்புக்காக இரத்ததானம்

நாட்டினுடைய அவசர நிலைமை மற்றும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உதவுவதனை கருத்திற்கொண்டு, மாத்தலை,நாவுலயிலுள்ள விஷேட படையணியினர், விஷேட படையணியின் படைத் தளபதியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய தங்களது இரத்தங்களை திங்கட் கிழமை 23 ஆம் திகதி மாத்தலை மாவட்ட வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கிக்கு கோவிட் -19 வைரஸ் அச்சுறுத்தலினை தொடர்ந்து வழங்கினர்.

1 ஆவது விஷேட படையணியைச் சேர்ந்த 124 அத காரிகள் மற்றும் 247 ஏனைய படையினர் தங்களது இரத்தங்களை மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட இரத்த வங்கி அதிகாரிகளிடம் வழங்கினர்.

அதேவேளை, 1 ஆவது விஷேட படையணியைச் மற்றும் விஷேட படையணி கொம்பாட் டைவிங் பயிற்சி கல்லூரியினை சேர்ந்த 123 அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் தங்களது இரத்தங்களை பதவிய கிராமிய வைத்தியசாலைக்கு செவ்வாய்கிழமை 25 ஆம் திகதி வழங்கினர்.

தேசிய தேவைப்பாட்டை கருத்திற் கொண்டு நாட்டிலுள்ள இராணுவத்தினர் மருத்துவ அதிகாரிகளுக்கு உதவும் வண்ணம் மறுபடியும் தங்களது இரத்தங்களை தானம் செய்ய முன்வந்துள்ளனர்.Asics footwear | New Releases Nike