Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th March 2020 15:53:34 Hours

‘லயா ஓய்வு விடுதி’ ஸ்டாப் ஹொரன இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கள்

குகுலகங்கை லயா இராணுவ ஓய்வு விடுதியில் உள்ள ஸ்டாப் உறுப்பினர்கள் வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியின் இருப்பினை அதிகரித்து நோயாளர்களை பாதுகாப்பதற்காக மருத்துவ அதிகாரிகளுக்கு உதவும் முகமாக தங்களது இரத்தங்களை 27 ஆம் திகதி ஹொரன வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கிக்கு தானம் செய்தனர். நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை கருத்திற் கொண்டு, பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து படையினருக்கும் தாங்கள் விரும்பினால் இரத்த வங்கிக்கு இரத்தங்களை வழங்கி ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொண்டார்.

‘லயா ஓய்வு விடுதியின் பிரதான நிறைவேற்று அதிகாரி பிரிகேடியர் எம்.ஆர் குணசேகர அவர்களுடன் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட மொத்தமாக 21 பேர் தங்களது இரத்தங்களை தானம் செய்தனர். affiliate tracking url | nike air speed turf rose gold price per gram