Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th March 2020 21:20:24 Hours

5100 சுதந்திர வர்த்தக வலய ஊளியர்கள் வீடுகளுக்கு செல்ல இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கள்

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிற்கு (27) முன்னர், கோவிட் எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் முன் பதிவு செய்யப்பட்ட அறிக்கை பின்வருமாறு காணப்பட்டன.

"கோவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளி கடந்த சில நாட்களில் அலுத்கம, பண்டராகம பகுதிகளில் 26 நபர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பது வியாழக்கிழமை (26) கண்டறியப்பட்டது. தகவல் கிடைத்ததும், உடனடியாக மருத்துவ அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

"வதுபிட்டிவெல மற்றும் கடுநாயக்க ஆகிய சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் பெரும்பான்மையான பெண்களை கொண்ட 5180 ஊளியர்கள் தங்கள் தங்குமிட இடங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ செல்ல முடியாமல் இருந்த வேளை அந்தந்த நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் இராணுவம் நாள் முழுவதும் (27) அருகிலுள்ள இடங்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கி கொண்டு சென்றுள்ளனர் ”என்று பாதுகாப்புத் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியும் தெரிவித்தார்.

"இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை சேர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட 501 நபர்களை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போக்குவரத்தில் தங்கள் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையினை முடித்த பின்னர் வீட்டிற்கு அனுப்புவதற்கு வசதிகளை செய்தது. மேலும் தேவையற்ற ஆபத்தான விடயங்களை செய்யாமல் இரண்டு வாரங்களுக்கு தங்கள் வீடுகளுக்குள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. இன்றுவரை, நாங்கள் தனிமைப்படுத்தப்பட்ட 1179 நபர்களை தங்கள் குடும்பங்களில் சேர அனுமதித்துள்ளோம், அதே நேரத்தில் 46 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள், "என்று அவர் கூறினார்.

சனிக்கிழமையன்று (28) தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் இருந்து 300 பேர் தனிமைப்படுத்தல் மருத்துவ பரிசோதனைமையங்களை விட்டு வெளியேறுவார்கள் என்றும், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் இருக்கும்படி கேட்டுக்கொண்டார், இருப்பினும் மக்கள் எந்த நோக்கமும் இல்லாமல் வீதிகளில் நகர்வதை நாங்கள் காண்கிறோம். கெளரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் உணவு வகைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வீட்டு வாசல்களில் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

"மக்கள் தங்கள் பொருட்களை வீடுகளிலிருந்து வாங்குவதற்கான பல செயல்பாட்டு வழிமுறைகள் இப்போது நடைமுறையில் உள்ளன, மேலும் சிலர் இந்த நெகிழ்வான அணுகுமுறையை தவறாகப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. மக்களைப் பாதுகாத்து, இந்த கொடிய அச்சுறுத்தலை ஒழிக்கவும் ஊரடங்கு சட்டத்தை கண்டிப்பாக விதிக்கவும், மீறுபவர்களைக் காவலில் வைக்கவும் பொலிசாருக்கு படையினர் உதவுவர்.மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காவிட்டால், எங்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடையும் "என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார். Adidas shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ