Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2020 15:22:24 Hours

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கோவிட்-19 கட்டுப்பாடு தொடர்பான விளக்கங்களை பெற்றுக்கொள்ளல்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கௌரவ சராஹ் ஹல்டன் அவர்கள் கோவிட்-19 பரவலை தடுப்பதற்கான தற்போதய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் ,தனிமைப்படுத்தல் நிலையங்களிலுள்ள பிரித்தானியர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்களின்சுகாதார நிலைமைகள் போன்ற விடயங்கள் தொடர்பான விளக்கங்களை பெற்றுக்கொள்ளும் முகமாக,கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை புதன் கிழமை 25 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியவர்களின் வேண்டுகோளிற்கமைவாக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள வகிபாகம் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது விளக்கமளிக்கப்பட்டதுடன்இவ் வைரஸின் தீவிர தன்மைமிக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டபோது , இராணுவமானது எவ்வாறு கண்டகாடு மற்றும் புனானி ஆகிய இடங்களில் தொடங்கி சில நாட்களுக்குள் மிகவும் அத்தியாவசியமான இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மேம்படுத்தியது என இச்சந்திப்பின் போது லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்தார்.

தியத்தலாவை மையங்களில் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள ஐந்து பிரித்தானிய பிரஜைகள் தொடர்பாக அவர்களின் வசதிகள், உணவு வகைகள் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் அவர் எடுத்துக்கூறினார், மேலும் அந்த நபர்கள் இரண்டு வார காலம் முடியும் வரைக்கும் எவ்வாறு உறவினர்களுடனான பிணைப்பு விடங்கள் தொடர்பாக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அங்கு வருகை தந்த தூதுவர் சுகாதார அதிகாரிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய விடயங்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக விசாரித்தார், மேலும் இவ் வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் முகமாக இரு நாடுகளுக்குமிடையிலான மருத்துவ நிபுணர்கள், அணுபவங்கள் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் ஆகியவெற்றை பகிர்ந்து கொள்ளும் அதேவேளை இந்த உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துரைத்தார்.

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களின் எண்ணிக்கை, அதன் அமைவிடங்கள் மற்றும் அத் தனிமைப்படுத்தல் நிலையங்களில் காணப்படும் வசதிகள் தொடர்பாக விளக்கமளித்தார். கலந்துரையாடலின் இறுதியில் இவர்களுக்கிடையில் ஞாபகச் சின்னங்களும் பரிமாரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Sportswear Design | Sneakers