Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th March 2020 10:00:38 Hours

ரணவிரு அபரல்ஸ் ஆடை தொழிற்சாலையினால் கோவிட்-19 இற்கு எதிராக பயன்படுத்துவதற்கான மைக்ரோபைபர் ஆடை வழங்கி வைப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சேவையினை வழங்கும் மருத்துவ குழுவானது, கோவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தக்கூடிய வகையிலான ரணவிரு அபரல்ஸ் ஆடை தொழிற்சாலையினால் தயாரிக்கப்பட்ட பாதணிகவச உறைகளுடனான மைக்ரோபைபர் ஆடைகளின் முதல் இருப்பு தொகுதியானது இன்று 23 ஆம் திகதி காலை சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் அணில் ஜாசிங்க அவர்களிடம் சுகாதார அமைச்சில் வைத்து ஒப்படைக்கப்பட்டன.

பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு பதிலாக ரணவிரு அபரல்ஸின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல மனதுங்க அவர்கள் இவ் மைக்ரோபைபர் ஆடைகளின் முதல் இருப்பு தொகுதியினை வழங்கி வைத்தார். இவ் மைக்ரோபைபர் ஆடைகள் அபுதியதொழில்நுட்ப முறையின் மூலம் சீலர் இயந்திரத்தினால் 137 அளவுகொண்ட பொலிதீனை பயன்படுத்தி குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்காணக்கான அங்கவீனமுற்ற படை வீரர்கள் சேவை புரியும் குறித்த தொழிற்சாலைக்கு வரையறுக்கப்பட்ட டார்லி தனியார் நிறுவனத்தினால் சீலர் இயந்திரத்திரங்களானது அன்பளிப்புச் செய்யப்பட்டன. இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டலில் ரணவிரு அபரல்ஸின் கட்டளைத் தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இவ்வுற்பத்தியானது தொடரும்.

யக்கல மற்றும் அலவாவில் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ரணவிரு அப்பரல்ஸ் தொழிற்சாலைகள் புதிய நுட்பங்கள், செலவு குறைந்த உத்திகள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் கடைப்பிடித்து அதிகாரிகள் மற்றும் படையினருக்கான மிக உயர்ந்த தரமான ஆடைகளை உற்பத்தி செய்கின்றன. Sports brands | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD