Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th March 2020 17:00:38 Hours

கோவிட்-19 தொடர்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிடப்பட்ட முக்கிமான தகவல்கள்

சுகாதார அமைச்சர் கௌரவ பவித்ரா வண்ணிஆராச்சி மற்றும் கோவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டின்ன் சவேந்திர சில்வா ஆகியோரின் தலைமையில் வியாழக்கிழமை 19 ஆம் திகதி மாலை ராஜகிரியவில் அமைந்துள்ள கோவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிடப்பட்ட முக்கிமான தகவல்கள் பின்வருமாறு

* இலங்கையில் மேலும் ஏழு கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் மற்றும் மொத்தமாக இவ்வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் 59 ஆக உயர்வடைந்துள்ளன என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

* அரசு ஏற்கனவே 17 தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்களை அமைத்துள்ளது. அந் நிலையங்களில் 2463 பேர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

* 6 வெளிநாட்டவர்கள் உட்பட எட்டு பணியாளர்கள் காலி பூசா கடற்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

* சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் தகவலின் பிரகாரம், கோவிட்-19 வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களில் 81% வீதத்தினர் ஆண்களாவர் மற்றும் 45.2 வீதமானோர் 41-50 வயதெல்லைக்குற்பட்டவர்களாவர்.

* ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் போன்றோர்களிடம் தங்களது இடங்களுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான தேவைகளைத் தவிர வேறு விடயங்களுக்காக ஹோட்டல் வளாகத்தினை விட்டு வெளியேரவேண்டாம் என ஆலோசனை வழங்குமாறு குறித்த ஹோட்டல் முகாமத்துவத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹோட்டல் முகாமைத்துவமானது தங்களது முழுமையான பாதுகாப்பினை குறித்த வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதாக உறுதிபூண்டுள்ளார்கள்.

* எப்படியாயினும், இலங்கை விமானப் படை மற்றும் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவ அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் சுகாதார அமைச்சிலுள்ள வைத்தியர்கள் உட்பட நிபுணர்களின் வழிகாட்டலுடன் அரசினால் தனிமைப்படுத்தல் நடவடிக்கையின்போது அவசியப்படும் தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் பாதுகாப்பு கவச கருவிகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

* குறித்த வைரஸ் தொற்றுகையை தடுப்பதற்காக ரூபா 500 மில்லியன் ஒதுக்கீடானது அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* அவசர நிலைமை ஏற்படும் சந்தர்பத்தில் மட்டும் பல் மற்றும் கண் சிகிச்சை சேவையானது இடம்பெறும்.

* கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க 500 தீவிர சிகிச்சை பிரிவுகள் நாடுபூராகவும் ஆயத்தமாவுள்ளன. ஆனால் ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்களில் உள்ளனர். அதற்கு மேலதிகமாக வெலிகந்தையிலுள்ள அரச வைத்தியசாலையானது தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையமாக இயங்குவதற்கு படையினரால் முற்றாக புணரமைக்கப்பட்டுள்ளது

* கோவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான நாடுகளில் இருந்து வருகை தந்ந 8437 பேர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் முகமாக தங்களை பதிவுசெய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

* வெளிநாடு செல்லும் அனைவரும் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் போது தங்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைச் சான்றிதலை வழங்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். தற்பொழுது இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்கள் இரண்டு வார தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். இது இலங்கைக்கு வருகை தரவிருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும்.

* இந்தியாவிற்கு தங்களது மதவழிபாடுகளுக்காக சென்ற 127 பிரயாணிகள் 113 பிரயாணிகள் யுஎல் இல 149 விமானத்தினூடாக புதன் கிழமை 18 ஆம் திகதி நாடு திரும்பிய பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சுய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் ரந்தம்பையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்களில் உள்ளனர்.

* யுஎல் இல 504 விமானத்தினூடாக 19 ஆம் திகதி மதியம் 12.45 இங்கு வந்தடைந்த 113 பிரயாணிகள் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டனர் அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபடவுள்ளார்.

* வத்தல,புத்தளம்,சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் ஊரங்குச் சட்டம் கால வரைறையின்றி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

* அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் புரியும் அனைத்து ஊளியர்களும் மார்ச் 20 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை வீட்டில் இருந்தவாறு தங்களது பணிகளை செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டள்ளது.

* கொழும்பு மாநகர சபையானது தீயணைப்பு சேவை, சுகாதார சேவை, வெட்டனரி சேவை, கழிவகற்றல் முகாமைத்துவ சேவைகள், வாகனநெரிசல் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு ஆகிய சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. latest Nike Sneakers | Nike Off-White