Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th March 2020 15:02:28 Hours

பலாலி விமான நிலையத்தை மனநலம் குறைவுற்ற சிறார்கள் சென்று பார்வை

யாழ் சுன்னாகம் உடுவில் மனநலம் குறைவுற்ற சிறார்கள் தங்கியிருக்கும் விடுதியிலுள்ள 31 மாணவர்கள் இம் மாதம் (11) ஆம் திகதி யாழ் பலாலி விமான நிலையத்தை பார்வையிட சென்றிருந்தனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது பரிந்துரைப்பின் கீழ் இந்த சிறார்களுக்கு இந்த விமான நிலையத்தை பார்வையிடுவதற்கான அனைத்து வசதிகளையும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் ஒழுங்கு செய்துள்ளது.

அத்துடன் இந்த சிறார்களுக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் சிற்றூண்டி உணவு வகைகளும் வழங்கி வைக்கப்பட்டன. affiliate link trace | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys