Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th March 2020 15:02:30 Hours

சிங்கப்படையணி தலைமையகத்தில் அதிகாரிகளின் வளர்ச்சிக்காக இடம்பெற்ற விரிவுரைகள்

இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் உள்ள அதிகாரிகளின் வளர்ச்சி நிமித்தம் அம்பேபுஸ்ஸ தலைமையக ‘டினர்ஷ் கிளப்’ ('Diners Club') சாலையில் சிங்கப் படையணியின் படைத் தளபதியும், காலாட் பணியகத்தின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த விரிவுரைவுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த தலைமை நிர்வாக அதிகாரியும், சிறப்பு பேச்சாளருமான திரு தமித் குருந்துஹேவா அவர்களை சிங்கப் படையணியின் படைத் தளபதி அவர்கள் வரவேற்றார். இவர் இந்த நிகழ்வில் "மூலோபாய இடர் தீர்வுகள்" மற்றும் 'ஆளுமை மேம்பாடு மற்றும் நிதி மேலாண்மை' என்ற தலைப்பில் சொற்பொழிவுகளை ஆற்றி பார்வையாளர்களது மனங்களை வென்றார்.

ஆளுமை மேம்பாடு மற்றும் நிதி மேலாண்மை' என்ற தலைப்பில் விரிவுரைகளையாற்றி இங்குள்ள அதிகாரிகளது வளர்ச்சிக்குரிய சிறந்த சொற்பொழிவுகளை ஆற்றினார்.

இறுதியில் சிங்கப் படையணியின் படைத் தளபதி அவர்களினால் திரு. தமித் குருந்துவெவ அவர்களுக்கு இவரது சேவையை பாராட்டி நினைவுச் சின்னமொன்று பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நிதித்துறை பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரதி பொலிஸ் மாஅதிபர் திரு அஜித் ரோஹன அவர்களினால் உதிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இந்த அதிகாரிகளுக்கு விரிவுரைகள் மேறகொள்ளப்பட்டன.

தொழில்முறை ஆங்கில மொழி ஆசிரியரும், தற்போது ஒரு அரசு அமைப்பின் மொழி பயிற்சி பிரிவின் தலைவராகவும் பணியாற்றி வரும் எம்.எஸ்.தமாரா கண்ணங்கரா, ‘தடைகளை எவ்வாறு வாய்ப்புகளாக மாற்றுவது மற்றும் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையை உருவாக்குவது எப்படி’ என்ற தலைமையில் விரிவுரைகளை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் சிங்கப் படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் அஜித் பல்லாவெல, இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். Running sport media | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK