Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th March 2020 15:02:31 Hours

பாதுகாப்பு பதவிநிலை பிரதானி நிர்வாக பரிசோதனை நிமித்தம் தலைமையகத்திற்கு விஜயம்

பனாகொடையிலுள்ள பொறியியல் சேவை படையணி தலைமையகத்திற்கு பாதுகாப்பு பதவிநிலை பிரதானியான மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் நிர்வாக பரிசோதனை நிமித்தம் இம் மாதம் (10) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த படையணியின் முக்கிய செயற்பாடுகள் மற்றும் அதன் செயல்பாட்டு அம்சங்கள் மற்றும் இலங்கை இராணுவத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப அனைத்து பட்டாலியன்களின் நிர்வாகம் மற்றும் படையணியின் அந்தந்த பட்டாலியன்களில் நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது ஆகியவற்றில் இந்த படையணி கவனம் செலுத்துகின்றது.

படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட பாதுகாப்பு பதவிநிலை பிரதானியை இந்த தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரிகேடியர் ஆர் கனேஹொட அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் பதவிநிலை பிரதானிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கெளரவிக்கப்பட்டார்.

நிர்வாக பரிசோதனை நிமித்தம் வருகை தந்த பாதுகாப்பு தலைமை பிரதானி இராணுவத்திற்குள் ஒரு தொழில்முறை படைப் பிரிவாக மாறத் தேவைப்பட்டால் நிர்வாக ஆய்வுகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை இங்குள்ள அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு விளக்கி கூறினார். jordan release date | Nike