Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2020 16:30:58 Hours

உத்தரவாதத்துடனும், பொறுப்புனர்ச்சியுடன் அனைவரும் செயல்படவும்

(ஊடக வெளியீடு)

கொடிய ‘ கோவிட் – 19 கொரோனோ வைரஸ் பரப்புவதை தடுக்கும் முகமாக மேற்கொள்ளும் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை நடவடிக்கை பணிகளில் உத்தரவாதத்துடனும், பொறுப்புணர்ச்சியுடன் அனைவரும் செயல்பட வேண்டுமென்று பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் முப்படை மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

இங்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்களது பாதுகாப்பு நிமித்தம் சாத்தியமான அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேன்மை தங்கிய ஜனாதிபதியின் பரிந்துரைப்பின் கீழ் முப்படையினரது பங்களிப்புடன் பூனானையிலுள்ள கந்தகாடு மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளில் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சுகாதார சேவை பணியகத்தின் பிரதி பணிப்பாளரும், ஐக்கிய நாடுகளில் தேர்ச்சி பெற்ற வைத்திய நிபுணரான கேர்ணல் டொக்டர் சவீன் கமகே அவர்களது தலைமையில் 6 பேரைக் கொண்ட வைத்திய குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் சிலர் இந்த செயற்பாடுகளை நிராகரிக்கின்றனர். தங்களுக்கு இந்த நிலையங்களில் இருப்பதற்கான போதிய வசதிகள் இல்லையென்று கோருகிறார்கள் ஆகையினால் அந்த தேவை வசதிகளையும் மிகவிரைவில் முப்படையினர் மேற்கொள்வார் என்று இராணுவ தளபதி மேலும் வலியுறுத்தினார்.

அதே நேரத்தில் இலங்கை இராணுவமானது இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ சோதனை நிலையங்களில் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட கண்காணிப்புக்குழு உட்புகுத்தப்படுத்தப்பட்டு முன்னேற்ற நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.(நிறைவு) Sports Shoes | adidas Yeezy Boost 350