Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2020 09:10:08 Hours

ஆப்கானிஸ்தான் தூதுவர் யாழ் தளபதியை சந்திப்பு

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் எம்.அஷ்ரப் ஹைதாரி அவர்கள் 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை யாழ் குடாநாட்டிற்கு தனது விஜயத்தினை மேற்கொண்டு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களை சந்தித்தார்.

தூதுவர் தலைமையிலான பிரதிநிதி குழு தங்களது நல்லுறவு கலந்துரையாடல்களின் போது யுத்ததின் பின்னர் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பாதுகாப்புப் படையினரின் பங்கு மற்றும் வடக்கு பொதுமக்களின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதன் போது ஆப்கானிஸ்தான் தூதுவர் இலங்கையின் வளர்ச்சிக்கான முயற்சிகள் மற்றும் இனவாத நல்லிணக்கம், அமைதி மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவதற்கான யாழ் பாதுகாப்புப் படையினர்களின் ஒத்துழைப்புக்கு தனது பாராட்டை தெரிவித்துக்கொண்டார்.

யாழ்பாணத்தின் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்புடன் படையினரால் மேற்கொள்ளும் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலைகள், காணி விடுவித்தல் குறித்து ஒரு விரிவான விளக்கத்தையும் யாழ் தளபதி விளக்கம் அளித்தார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டன. அத்துடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதாணி பிரிகேடியர் பிரசன்ன ரணவக அவர்களும் இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றார். Sport media | NIKE HOMME