Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2020 10:50:50 Hours

21 ஆவது படைப் பிரிவினரால் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 21 ஆவது படைப் பிரிவின் படையினரால் அனுராதபுரத்தில் உள்ள 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் இலவச மூக்கு கண்ணாடிகள் மற்றும் செயற்கை கால்கள் ஆகியவற்றை வழங்கும் நிகழ்வானது 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுராதபுர இளைஞர் மத்திய மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிரி ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 21ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்கள் கலந்து கொண்டார்.

21 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் வேண்டுகோளின் பேரில் கொழும்பு ரொட்டரி கழகம் மற்றும் கொழும்பின் ‘அசரண சரண சங்கம்’ ஆகியவை இணைந்து இந்த திட்டத்திற்கு அனுசரனை வழங்கின.மேலும் சமூக நலத் திட்டத்தின் அனுராதபுர ரொட்டரி கழக பணிப்பாளர், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர், டொக்டர் பாலித பண்டார, 212 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி கேர்ணல் அனில் பீரிஸ், 213 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் ரசிக குமார, 21 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி மற்றும் 21 ஆவது படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் 21 பிரிவின் படையினர்கள் உட்பட பல பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டன.

அத்துடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 09 ஆம் திகதி திங்கட்கிழமை பொது மக்களின் நலனுக்காக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் நடமாடும் சுகாதார பரிசோதனையும் மற்றும் இலவசமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன. இந்த நடமாடும் பரிசோதனையின் போது 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முழுமையான மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்கள் கலந்துகொண்டதுடன், சிவில் விவகார அதிகாரி உட்பட வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைப் பிரிவு தலைமையகங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கொழும்பு ரொட்டரி கழகமானது கேர்ணல் ஜனகா ரத்வத்த அவர்களின் தனிப்பட்ட ஒருங்கிணைப்பின் மூலம் நடமாடும் மருத்துவ சேவை நடத்துவதற்கும், பொதுமக்களுக்கான இலவச கண்ணாடிகளை வழங்குவதற்கும் நிதியுதவி வழங்கின என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | UK Trainer News & Releases