Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2020 15:12:20 Hours

லயா சபாரி ஹோட்டலுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான VIP அனுகல் விருது வழங்கி வைப்பு

இலங்கை இராணுவத்தால் நிர்வாகிக்கப்பட்டு சிறந்த விருந்தோம்பல் சேவைகளை வழங்கி வரும் யாலை பலாதுபானையில் அமைந்துள்ள ‘லயா சபாரி ஹோட்டலுக்கு இணையதளத்தின் மூலம் பயண முகவர்களின் பரிந்துரைகளின் பேரில் 10 புள்ளிகளில் 8.6 மதீப்பீட்டைக் கொண்டுள்ளமையால் 2020 ஆம் ஆண்டிற்கான VIP அனுகல் விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வலைத்தளங்களான எக்ஸ்பீடியா, அகோடா, புக்கிங்.கொம் மற்றும் ப்ரிக்லைன் போன்றவை உலகெங்கிலும் முன்பதிவு செய்யப்படுகின்ற இணையத்தளமாக விளங்குகின்றது. இதன் மூலம் ‘லயா சபாரி’ ஒரு சிறந்த பட்டியலிடப்பட்ட விடுமுறை விடுதியாக மதிப்பிடப்பட்டுள்ளது. எக்ஸ்பீடியா.கொம் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிரபலமான விடுமுறை தேர்வாக ‘லயா சபாரி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

லயா சபாரியானது ‘விருந்தினர்களால் 2020 ஆம் ஆண்டிற்கான விருதை வென்று சாதனையை நிலைநாட்டி இது தனது பிரத்தியேக விருந்தினர் சேவையின் மூலம் சிறந்த சேவைகளை வழங்கி தனது தரத்தை உயரத்தியுள்ளது.

இந்த விருது 2020 ஆம் ஆண்டிற்கான நாடு முழுவதும் உள்ள மற்ற 35 ஹோட்டல்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த விருதானது விரைவில் ‘லயா சபாரி’ ஹோட்டலுக்கு வழங்கப்படும் என்று இந்த ஹோட்டலின் பொது முகாமையாளர் கேர்ணல் லலித் ஹேவா அவர்கள் தெரிவித்தார்.

இந்த விருது கிடைக்கப் பெற்ற செய்தியை கேட்ட பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இந்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தற்போது, 40% க்கும் அதிகமான ‘லயா சபாரி’ முன்பதிவுகள் OTA கள் மூலமாகவே செய்யப்படுகின்றன, அதே நேரத்தில் 52% உலகளாவிய இட ஒதுக்கீடு மற்றும் முன்பதிவுகள் இப்போது நேரடியாக முன்பதிவு வலைத்தளங்களின் தரவு தளங்கள் வழியாக நேரடியாக செய்யப்படுகின்றன என்று உத்தியோகபூர்வமாக நிர்வாக சபை வெளியிட்டுள்ளன.

ஹோட்டல் கொம் இணையதளங்களினூடாக வியாபாரத்தை மேம்படுத்தி 8.6 மதீப்பீடு கிடைக்கப் பெற்றது இந்த நிர்வாகத்தினால் சுற்றுலா பயணிகளுக்கு தரமான சேவைகள் மற்றும் இன்பமூட்டும் வகையில் சிறந்த பணிகளை மேற்கொண்டமையினால் இந்த விருதுகளை பெற்றுக் கொண்டு தரமான சேவையை இந்த ஹோட்டல் நிர்வாகம் நிரூபித்துள்ளது.

"லயா சபாரியானது” தப்போது விஐபி அணுகல் "என்ற மதிப்புமிக்க அந்தஸ்தைக் கொண்டு நாடு பூராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில ஹோட்டல்களுக்கு மட்டுமே வழங்கப்படும் நற்பெயர் சேவையை பெற்றுக்கொண்டு விருந்தினர்களுக்கான சிறப்பான சேவையை பெற்றுக் கொள்வதற்கான விருதை பெற்று தரமான சேவைகளை வழங்குகின்றது.

எங்களுக்கு கிடைக்கப் பெற்ற இந்த விருதை இணைய தளங்களில் நீங்கள் பார்க்கலாம்.

மேலதிக தகவல்களுக்கு இந்த இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம். 047-223 9851, 047-223 9852, 047-362 5151, 077 382 6909. Nike air jordan Sneakers | Air Jordan