Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd March 2020 11:45:43 Hours

படையினர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம்

இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் ‘சந்தோசமான இராணுவ வாழ்க்கை’ எனும் தொணிப்பொருளின் கீழ் செயலமர்வு கடந்த பெப்ரவாரி மாதம் 25 – 27 ஆம் திகதி வரை இடம்பெற்றன.

இந்த செயலமர்வுகள் சாலியபுரயிலுள்ள கஜபா படையணி தலைமையகத்திலும், தம்புள்ளையிலுள்ள பொறியியல் காலாட் படைத் தலைமையகத்திலும், குருணாகல் போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படைத் தலைமையகங்களில் தடுப்பு மருத்துவம் மற்றும் மன ஆரோக்கிய பணிப்பகத்தின் கேர்ணல் ஆர்.எம்.எம் மொனராகல அவர்களது தலைமையில் மூன்று விரிவுரையாளர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.

அத்துடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59, 64, 68 ஆவது படைப் பிரிவுகளில் இராணுவ உளவியல் பணியகத்தில் பணி புரியும் லெப்டினன்ட் கேர்ணல் பீ.ஜி.எஸ் சமந்தி அவர்களின் தலைமையில் “ ஒரு நல்ல குடும்ப வாழ்க்கைக்கான அணுகுமுறைகளின் வளர்ச்சி” எனும் தொணிப் பொருளின் கீழ் படையினர்களுக்கு செயலமர்வு மேற்கொள்ளப்பட்டன.

இந்த செயலமர்வுகள் இராணுவ உளவியல் பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன அவர்களது பணிப்புரையின் கீழ் இடம்பெற்றன. Best Nike Sneakers | Nike Shoes