27th February 2020 16:00:28 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்ரசேகர அவர்கள் 26 ஆம் திகதி புதன்கிழமை பொரளையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் வைத்து தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மகளிர் படையினரால் இப் புதிய தளபதிக்கு நுழை வாயலில் வைத்து இராணுவ சம்பிரதாய முறைப்படி வரவேற்பு மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் மத வழிப்பாட்டுடன் உத்தியோக பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது கடமையை பொறுப்பேற்றார்.
அத்துடன் அவர் அனைத்து மகளிர் படையினர்களிடம் உரையாற்றியதை தொடர்ந்து தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார். இவர் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 18 ஆவது புதிய படைத் தளபதியாவார் என குறிப்பிடத்தக்கது. Sportswear free shipping | Air Jordan Release Dates 2020