Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th February 2020 15:20:59 Hours

இந்திய பாதுகாப்பு தயாரிப்புகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட பாதுகாப்பு உயரதிகாரிகள்

இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு உபகரண நிறுவனங்களின் தயாரிப்புகளை காண்பிக்கும் கருத்தரங்கானது (28) ஆம் திகதி காலை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த தயாரிப்புகளை காட்ச்சி படுத்தும் நிகழ்விற்கு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் முப்படை அதிகாரிகள்,மேலதிக பாதுகாப்பு செயலாளர் திரு.பி.பி.எஸ்.சி னொனிஸ், பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா,கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் பியல் டி சில்வா, விமானப் படைத் தளபதி எயா மார்ஷ்சல் சுமங்கள டயஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை ஆயுதப்படைகளுக்கு பொருத்தமான ஆயுத தயாரிப்பு நிறுவனங்களான 10 க்கும் மேற்பட்ட இந்திய முன்னணி நிறுவனங்களின் குழுவினர்கலான, பரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், கோ ஷிப்யார்ட் லிமிடெட், கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட், சென் டெக்னாலஜிஸ் லிமிடெட், எஸ்.எம்.பி.பி பிரைவேட் லிமிடெட், பாரத் போர்ஜ் லிமிடெட், எம்.கே.யூ லிமிடெட், அசோக் லேலண்ட் மற்றும் லார்சன் மற்றும் டூப்ரோ லிமிடெட் 'இந்திய பாதுகாப்பு தயாரிப்புகள்' தொடர்பாக இந்த கருத்தரங்கின் போது தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர்.

இந்த நிகழ்வானது இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு பிரிவினரால் ஏற்பாடு செய்ப்பட்டதுடன், இந்த கருத்தரங்கில் தனிப்பட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் பற்றிய சுருக்கமான விளக்கக்காட்சிகளை உள்ளடக்கியதுடன் மற்றும் கருத்தரங்கன் இரண்டாம் பிரிவில் இந்திய தூதுக்குழுவினர் இலங்கை ஆயுதப்படைகளின் தொடர்புடைய பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இதன் போது முப்படைகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சு,பொலிஸ் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படை உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கெப்டன் அசோக் ராவ் அவர்கள் நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்புரையை வழங்கினார். jordan Sneakers | Zapatillas de running Nike - Mujer