Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th February 2020 17:35:55 Hours

புதிய தியான நிலையம் இராணுவ தளபதியால் திறந்து வைப்பு

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மலைப்பிரசேத்தில் அமைந்திருக்கும் உடபிடிவல நிலப்பரப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய உடதும்பர‘சமத விதராஷன’ தியான நிலையம் பெப்ரவரி (29) ஆம் திகதி காலை பௌத்த மத வழிப்பாட்டுடன் பௌத்த மகா சங்க தேரர்களுக்கு கையளிக்கபட்டதுடன், இந்த நிகழ்விற்கு பௌத்த தேரரான வரகாகொட ஞானரத்தன நாயக்க தேரர் அவர்கள்,அஸ்கிரி மகாநாயக தேரர், நாரம்பனாவே ஆனந்த தேரர்,அஸ்கிரி பிரிவேனே பிரிவேனாதிபதி மற்றும் அஸ்கிரி பெளத்த நிலையத்தின் பெளத்த தேரர்கள் உட்பட ஶ்ரீ தலதா மாளிகையின் தியவடன நீலமே நிலங்க தெல பண்டார,பதில் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் மத்திய மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெணான்டோ பல உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இப் புதிய வளாகம், தியான குடிசைகள், பௌத்த துறவிகளுக்கான மடங்கள், தானம் வழங்கும் அறைகள் மற்றும் பிற அனைத்து வசதிகளுடான இவ் விடமானது முன்னாள் சிரேஷ்ட (ஓய்வு பெற்ற) பிரதி பொலிஸ்மா அதிபர் நிமல் மெதிவக்க மற்றும் அவரது குடும்பத்தினரால் ‘சசன’ க்கு நன்கொடை அளிக்கப்பட்டது

இந்த தியான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்விற்கு பிரதான அதிதிகள் தலைமை மதகுருமார்கள், மகா சங்க உறுப்பினர்களை குலுண்தென்ன சந்தியில் இருந்து ‘வெஸ்’ நடனக் கலைஞர்களால் நடன நிகழ்வுடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். மேலும் கழுன்தென்ன விமலதர்ம மஹாவித்தியாலய வளாகத்தினுள் புதிய பௌத்த சிலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் நடப்பட்டது. மேலும் ஆதரவற்ற குடும்பத்தினருக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடும் கையளிக்கப்பட்டது.

காலை 9.45 மணியளவில் பௌத்த தேரரான வரகாகொட ஞானரத்தன நாயக்க தேரர் அவர்களால் ரிபன்வெட்டி தியான நிலையம் திறந்துவைக்கப்பட்டதுடன், பிரதம அதிதியான இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் நினைவு பலகை திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் இங்கு வைக்கப்பட்ட பௌத்த சிலைக்கு பூவைத்து பூஜைகள் செய்யப்பட்டன. இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பௌத்த தேரர்களால் இந்த தியான நிலையத்தின் நிர்மான பணிகள் பரிசீலனை செய்யப்பட்டன.

இந்த தியான நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்விற்கு வருகை தந்த பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பிரதான பௌத்த தேரர்களால் ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார். நாட்டின் எதிர்கால பொறுப்புகள் மற்றும் சவால்களை வெற்றி கொள்வதற்காக இராணுவ தளபதிக்கு ஆசீர்வாதங்கள் வழங்கினார்.

இந்த நிகழ்விற்கு இப் பிரதேசத்தில் வாழும் அனைத்து பௌத்த பாடசாலை மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர். Mysneakers | Nike