Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th February 2020 10:49:18 Hours

கிளிநொச்சி படையினரால் கேரலா கஞ்சா மீட்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்குட்பட்ட 66 ஆவது படைப் பிரிவு தலையகத்தின் கீழ் இயங்கும் 663 ஆவது படைப் பிரிவில் உள்ள 2 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர்கள், இராணுவ புலனாய்வு படையினர்களுடன் இணைந்து (29) ஆம் திகதி சனிக்கிழமையன்று ஜெயபுரத்தின் வேராவில் பகுதியில் உள்ள பல்லவராயங்காடு நோக்கிச் சென்ற லொரியில் வைத்து 323 கிலோ கேரளா கஞ்சாவுடன் (கஞ்சா) ஒரு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையானது இராணுவ புலனாய்வு படையினர்கள் , 2 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் பிராவோ கம்பெனியின் படையினர்களுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய கட்டளை அதிகாரியுடன் சேர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்து 323 கிலோ கஞ்சாவை தனித்தனி பொதிகளில் மறைத்து வைத்திருந்த வாகனத்தையும் (அசோக் லேலண்ட்) தடுத்து நிறுத்தி கைப்பற்றினர்.

மேலும் படையினர்களால் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட வாகன ஓட்டுநர் இரணைமடுவில் உள்ள விசேட படையினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மேலும் சந்தேகநபர் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நடவடிக்கையானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய 66 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி.விஜேசுந்தர,663 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் கே.எல்.எஸ்.எஸ். லியனகம அவர்களின் கண்காணிப்பில் இடம்பெற்றன.

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இராணுவத்தினர் அரசாங்கத்தின் தற்போதைய 'போதைப்பொருள் ஒழிப்பு' திட்டத்திற்கு அமைய போதைப்பொருள் போக்குவரத்து / பயன்பாடு / நாடு முழுவதும் விற்பனை ஆகியவற்றினை கட்டுப்படுத்த தங்களது ஒத்துழைப்பினை வழங்குகின்றன. buy shoes | Ανδρικά Nike