Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th February 2020 20:22:08 Hours

விசேட தேவையுடைய படையினரால் தொழு நோயாளர்களுக்கு சிகையலங்கார பணிகள்

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது காயமுற்று விஷேட தேவையுடைய படையினர்கள் தங்கியிருக்கும் வத்தளை ஹேகித்த பிரதேசத்தில் உள்ள ரணவிரு வள மையத்தில் உள்ள விஷேட தேவையுடைய படையினரினரால் ஹெந்தல தொழுநோய் வைத்தியசாலையில் உள்ள தொழுநோயாளர்களின் சிகையலங்காரங்கள் மற்றும் அவர்களை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ் வைத்தியசாலையில் தமது நோய் குணமடைந்து தங்களது உறவினர்களின் ஆதரவின்றி தனித்து காணப்படுபவர்களுக்கு இந்த மனிதாபிமானப் பணியானது மேற்கொள்ளபட்டுள்ளது.

இந்த ரணவிரு வள மையத்தில் சிகை அலங்காரம் தொடர்பாக பயிற்றுவிக்கப்பட்ட 10 விஷேட தேவையுடைய படையினரால், இம் மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் தனிக பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் தொழுநோய் வைத்தியசாலையில் காணப்படும் 32 நோயாளிகளான (ஆண் மற்றும் பெண்) அங்கத்தவர்கள் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் தமது சொந்த உறவுகள் தம்மை பொறுப்பேற்க முடியாத சூழ் நிலையில் காணப்படும் தொழுநோயிலிருந்து சுகமடைந்த நபர்கள் உள்ளடங்குவர்.

தற்போது ரணவிரு வள மையமானது இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஒருங்கிணைப்போடு இவ் விசேட தேவையுடைய படையினர்களின் திறமைகளை வெளிக் கொனரும் நோக்கில், மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கரவண்டி பழுதுபார்த்தல் , அலுமினியம் , தச்சு இயந்திரங்கள் ,கனனி மென்பொருள் , சிகை அலங்காரம் , மற்றும் அழகுக் கலை வன்பொருள் ,கையடக்க தொலைபேசி பழுதுபார்த்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

குறித்த விஷேட தேவையுடைய படையினர் சிகை அலங்காரம் மற்றும் சவரம் செய்தல் போன்றவற்றை குணமடைந்த இவ் வைத்தியசாலையின் நபர்களுக்கு மேற்கொள்ள முன்னர் அவர்களது தேவைகள் தொடர்பாக வினவி ஆராய்ந்தனர். மேலும் இத் தொழுநோய் மற்றும் இவ் வைத்தியசாலையானது சமூகத்தில் வித்தியாசமான கண்னோட்டத்தில் பார்க்கப்படுகின்றது என மேலும் தெரியவந்துள்ளது. Nike air jordan Sneakers | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify