Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th February 2020 16:34:20 Hours

சாம்பியா இராணுவ தளபதி இலங்கையிலுருந்து தனது நாட்டிற்கு பயணம்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட சாம்பியா நாட்டின் இராணுவ தளபதி டப்ள்யூ.எம் சிகாஸ்வே DIP (DSS) MA (DSS) அவர்கள் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு இலங்கையிலிருந்து இன்று (26) ஆம் திகதி காலை புறப்பட்டுச் சென்றார்.

சாம்பியா இராணுவ தளபதியை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று இவர் இலங்கைக்கான விஜயத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட அல்பமும் இவருக்கு பரிசாக வழங்கி வைக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டார்.

சாம்பியா இராணுவ தளபதியவர்கள் இலங்கைக்கான விஜயத்தின் போது பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதிகளை சந்தித்ததுடன், தியதலாவையிலுள்ள இராணுவ எகடமி மற்றும் சபுகஸ்கந்தையிலுள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரிக்கு விஜயத்தை மேற்கொண்டார். Authentic Nike Sneakers | Women's Designer Sneakers - Luxury Shopping