Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th February 2020 10:50:48 Hours

சாம்பியா இராணுவ தளபதி பாதுகாப்பு சேவை கட்டளை பதவிநிலை கல்லூரிக்கு விஜயம்

சபுகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரிக்கு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சாம்பியா இராணுவ தளபதியான டப்ள்யூ.எம் சிகாஸ்வே DIP (DSS) MA (DSS) அவர்கள் இம் மாதம் (25) ஆம் திகதி உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த சாம்பியன் இராணுவ தளபதியை சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றார்.

பின்னர் இருவருக்கும் இடையில் இருநாடுகளுக்கும் இடையிலான பயிற்சிகள் மற்றும் எகடமி விடயங்கள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றன. இறுதியில் இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.

இறுதியில் சாம்பியன் இராணுவ தளபதி அவர்கள் விஷேட அதிதிகளுக்கான குறிப்பேட்டு புத்தகத்திலும் கையொப்பமிட்டு குழுப்புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.

சாம்பிய இராணுவ தளபதியவர்கள் இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running Sneakers | Nike