Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th February 2020 15:34:10 Hours

புலிகளின் பயங்கரவாதத்தை இராணுவம் தோற்கடித்த போதிலும், சில தமிழ் அரசியல்வாதிகள் அதன் கொள்கைகளை இன்னும் பரப்புகின்றனர் - பாதுகாப்பு செயலாளர்

இலங்கை இராணுவம் 10 வருடங்களுக்கு முன்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் முற்றாக தோற்கடித்தபோதிலும், தமிழ் அரசியல்வாதிகள் சிலர் பிரிவினைவாத கொள்ககையை மீண்டும் தமிழ் மக்களிளிடையே பரப்புவதற்கு முயற்சிப்பதாகவும், அதனை முறியடிக்கும் சவால்கள் தற்பொழுதும் காணப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

சாம்பியா நாட்டின் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபள்யூ எம் சிகாஸ்வே மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுக்குமிடையிலான சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது. இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் "தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் ஒருபோதும் தனி நாடொன்று கோரவில்லை எனவும், தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வையே விரும்புவதாகவும் இவர்களின் கொள்கைகளில் இருந்து அனேகமான தமிழ் மக்கள் முற்றிலும் வேறுபட்ட கொள்கையுடன் காணப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்பட்ட இராணுவ நிபுணத்துவத்தை நினைவுகூர்ந்த பாதுகாப்பு செயலாளர், தமிழீழ விடுதலைப்புலிகள் போரியல் வழமைக்கு மாறான யுத்த தந்திரங்களை பயன்படுத்தியதாகவும் அதனை முறியடிப்பதற்காக இலங்கை இராணுவத்தினர் அதனை விட சிறந்த தமது யுத்த தந்திரங்களையும் உத்திகளையும் பயன்படுத்தி 2009 ஆம் ஆண்டு அவர்களை தோற்கடித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்குகிடையே நிலவும் நீடித்த உறவுகள் தொடர்பாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், அணிசேரா நாடுகளுக்கு முன்பிருந்தே வலுவான உறவுகள் காணப்படுவதாகவும் மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த சாம்பியா இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிகாஸ்வே, இருநாடுகளுக்குமிடையே காணப்படும் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்தையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவித்தார்.

"இலங்கை இராணுவத்தின் போரியல் வழமைக்கு மாறான யுத்த தந்திரங்கங்களின் மூலம் தமது நாட்டு இராணுவம் பெரிதும் பயனடையும் " என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது பாதுகாப்பு செயலாளர் குணரத்ன, நீண்ட தூர மறுமதிப்பீட்டு ரோந்து நடவடிக்கை, உயிர்வாழ் சவால்களை எதிர்கொள்ளல் , எதிரிகளிடமிருந்து தப்பித்தல், மற்றும் போர் கண்காணிப்பு குறித்த விடயங்கள் தொடர்பாக இலங்கை விஷேட படைப்பிரிவினரின் நிபுணத்துவம் மிக்க பயிற்சியாளர்களினால் சாம்பியா நாட்டின் விஷேட படைப்பிரிவினருக்கு பயிற்சிகளை வழங்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக அந்நாட்டு இராணுவத்தளபதியிடம் தெரிவித்தார். சாம்பியா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் தர அதிகாரி ஒருவரும், ஆறு கெடேட் அதிகாரிகளும் தற்போது கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் உள்ளிட்ட இலங்கை இராணுவ நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த சாம்பியா இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிகாஸ்வே உடன் இணைந்து சாம்பியா நாட்டின் இந்தியாவிற்கான பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் சிமுசந்து, பயிற்சி நடவடிக்கைகளுக்கான பிரிகேடியர் ஜெனரல் நகன்வே, கொள்கை மற்றும் உத்திகளுக்கான பிரதிப்பணிப்பாளர் நாயகம் கேர்ணல் லியனார்ட் பீட்டர் டாக, சம்பியா பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் கேர்ணல் ஜெதுரு சிபிலி, பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் பிரதம பயிற்றுனர் கேர்ணல், டீ பண்டா, விஷேட படைகள் கல்லூரியின் கட்டளைத்தளபதி லெப்டினன்ட் கேர்ணல் சப்வேய, இராணுவத்தளபதியின் உதவியாளர் கெப்டன் எம் முலங்கா ஆகியோரும் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

( பாதுகாப்பு அமைச்சின் வெளியீடு) Buy Sneakers | UK Trainer News & Releases