Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2020 10:02:08 Hours

சாம்பியா இராணுவ தளபதி இராணுவ எகடமிக்கு விஜயம்

இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டுள்ள சாம்பியன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டப்ள்யூ.எம் சிகாஷ்வோ அவர்கள் தியதலாவையிலுள்ள இராணுவ எடமிக்கு இம் மாதம் (22) ஆம் திகதி வருகை தந்தார். இவரை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்கள் எகடமியில் வைத்து வரவேற்றார்.

பின்னர் சாம்பியன் இராணுவ தளபதிக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார். அத்தருணத்தில் இவரை இராணுவ எகடமியின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஏ.கே.ஜி.கே.யூ குணரத்ன அவர்களால் வரவேற்று எகடமி வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று செம்பியன் இராணுவ தளபதியவர்கள் நாட்டிற்காக உயிர் நீத்த படை வீரர்களை நினைவு படுத்தி மௌன அஞ்சலிகளை செலுத்தினார்.

பின்பு சாம்பியன் இராணுவ தளபதி அவர்கள் எகடமியிலுள்ள கேட்போர் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்பு எகடமியின் கட்டளை அதிகாரியான கேர்ணல் நிலந்த பிரேமரத்ன அவர்களினால் இராணுவ எகடமியின் செயற் பொறுப்புக்கள் மற்றும் கடமை விதிமுறைகள் தொடர்பான விடயங்கள் விளக்கமளிக்கப்பட்டு சாம்பியன் நாட்டிலிருந்து வருகை தந்து எமது இராணுவ எகடமியில் பயிற்சிகளை மேற்கொள்ளும் சாம்பியன் கெடற் அதிகாரிகள் தொடர்பாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இராணுவ எகடமியின் கட்டளை தளபதியின் வேண்டுகோளை ஏற்று வருகை தந்த சாம்பியன் இராணுவ தளபதி அவர்கள் எகடமி கட்டளை தளபதியுடன் பயிற்சி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இறுதியில் இராணுவ எகடமியின் கட்டளை தளபதி அவர்கள் சாம்பியன் இராணுவ தளபதிக்கு இவரது வருகையை கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னமொன்று பரிசளித்து கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் தியதலாவையிலுள்ள ARTRAC தலைமையகத்திற்கு சாம்பியன் இராணுவ தளபதியவர்கள் வருகை தந்தார். இவரை இத்தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா அவர்கள் வரவேற்றார். பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையில் பயிற்சிகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு சாம்பியன் இராணுவ தளபதி அவர்களுக்கு ARTRAC தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களினால் நினைவு பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டு இறுதியில் குழுப்புகைப்படத்திலும் இவர் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike footwear | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ