Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2020 08:01:36 Hours

புதிதாக பதவியுயர்தப்பட்ட ஆறு மேஜர் ஜெனரல்களுக்கான கௌரவ மரியாதை வழங்கும் நிகழ்வு

புதிதாக பதவியுயர்தப்பட்ட கஜபா படையணியைச் சேரந்த ஆறு மேஜர் ஜெனரல்களுக்கான கௌரவ மரியாதை வழங்கும் நிகழ்வானது வியாழக்கிழமை (20) சாலியபுரையிலுள்ள கஜபா படையணித் தலைமையகத்தில் இடம்பெற்றது.

மேஜர் ஜெனரல் டபல்யூ.எம்.ஜே.ஆர்.கே சேனாரத்ன மேஜர் ஜெனரல் என்.டி செனரத் நிவுன்ஹெல்ல மேஜர் ஜெனரல் எச்.எல.;வி.எம் லியனகே மேஜர் ஜெனரல் எச.எம்.டி.பி ஹங்கிலிபொல மேஜர் ஜெனரல் என்.ஆர் லமாஹேவகே மற்றும் மேஜர் ஜெனரல் கே.பி நுகேகொட ஆகியோரின் பதவியுயர்விற்காக கஜபா படையணியின் படைத் தளபதி விசேட படையணியின் படைத் தளபதி பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது வாழ்த்துககளை ஏற்கனவே இராணுவத் தலைமையகத்தில் வைத்து தெரிவித்தார்.

புதிதாக பதவியுயர்தப்;பட்ட குறித்த மேஜர் ஜெனரல்கள் கஜபா படையணியின் படைத் தளபதியவர்களுக்கு பதிலாக படையணியின் மத்திய கட்டளைத் தளபதி கேணல் மஹிந்த அவர்களினால் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். பின்னர் அவர்கள் கஜபா படையணியின் ஸ்தாபகரான காலஞ்சென்ற மேஜர் ஜெனரல விஜய விமலரத்ன அவர்கின் நினைவுத்துhபிக்கு மலர் மாலை அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆறு மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டது.

இறுதியாக அவர்கள் அனைத்து படையினருடன் அணைந்து தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில படைத் தலைமையகத்தின் உறுப்பினர்கள் பிரதி மத்திய கட்டளைத் தளபதி தவி நிலை அதிகாரிகள் கட்டளை அதிகாரிகள மற்றும் படையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். jordan release date | Air Jordan Release Dates 2020