Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2020 17:01:08 Hours

சாம்பிய நாட்டு இராணுவத் தளபதியவர்களின் இலங்கை விஜயம்

சாம்பிய நாட்டு இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் டபிள்யூ.எம் சிகாஸ்வே பிஎஸ்சி டிஐபி (டிஎஸ்எஸ்) எம்ஏ (டிஎஸ்எஸ்) அவர்கள் இலங்கைக்கான ஐந்து நாள் நல்லிணக்க விஜயத்த்தின் அடிப்படையில் இன்று (21) இலங்கை வந்தடைந்தார். இவருடன் ஆறு பேரைக் கொண்ட இராணுவக் குழுவும் விஜயத்தினை மேற்கொண்டனர்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சாம்பிய நாட்டு இராணுவத் தளபதியவர்களை இராணுவ பதவி நலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனக்கே, சிரேஷ்ட லியய்சன் அதிகாரியும் 53 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன மற்றும் சில அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இலங்கை சம்பிரதாய முறைப்படி இராணுவ கலாச்சார மற்றும் நடனங்களுக்கு மத்தியில் செங்கம்பள வரவேற்களிக்கப்பட்டது. அதன் பின்னர் மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனக்கே மற்றும் மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன ஆகியோருடன் விசேட அதிதிகள் அறையில் கலந்துரையாடினார்.

இவ் விஜயத்தின் போது சாம்பிய நாட்டு இராணுவத் தளபதி உட்பட சாம்பிய, இந்தியாவின் புது டெல்லி ஆகிய நாட்டு உயர் ஸ்தாணிகராலயங்களின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் சிமுசந்து, பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் ஜெனரல் நா அன்ட்வே, கொள்கை கோட்பாடு மற்றும் மூலோபாய பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளர் கேர்ணல் லியோநாட் பீடர் டாகா, சாம்பிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் கேர்ணல் ஜேதுரு சிபிலி, பதவிநிலைக் கல்லுரியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கேர்ணல் டி பண்டா, விசேட படையணி பாடசாலையின் தளபதி லெப்டினன் கேர்ணல் எம் சப்வயா மற்றும் எயிட் டு கேம்பின் கெப்டன் எம் முல்லேங்க உள்ளிட்ட குழுவினர்கள் இலங்கை வந்தனர்.

சாப்பியன் இராணுவத் தளபதியவர்கள் இலங்கைக்கான தனது விஜயத்தின் போது அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, கௌரவ பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானி மற்றும் ,இராணுவத் தளபதி ,கடற் படைத் தளபதி, விமானப் படைத் தளபதி ஆகியோருடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதுடன், ஶ்ரீ ஜயவர்தனபுரையில் உள்ள உயிர்நீத்த படையினரின் ஞாபகார்த துபிக்கான விஜயத்தினையும் மேற்கொள்ளவுள்ளார் என எதிர்பார்கப்படுகின்றது. அதன் பின்னர் அவர் இராணுவத் தலைமையகம், பாதுகாப்பு சேவைக் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி, இலங்கை இராணுவ அக்கடமி ,கடற்படை அக்கடமி மற்றும் பல பிரதேசங்களுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்ட சாம்பிய நாட்டு இராணுவத் தளபதியவர்கள் மற்றும் அவரது குழுவினர் 53 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டனர். bridgemedia | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov