Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2020 14:47:32 Hours

இராணுவத் தளபதியவர்களால் புதிய மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய இராணுவ வீரர்களான 1ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எச் எம் பிரேமரத்ன மற்றும் 2ஆவது (தொண்டர்) இலங்கை மின்சாரவியல் மற்றும் பொறியியல் படையணியைச் சேர்ந்த சாதாரண படைவீரர் எஸ் ஏ ராஜகருண போன்றோருக்கு இன்று காலை 20ஆம் திகதி புதிய இரண்டு யமகா மோட்டார் சைக்கிளானது பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வானது இராணுவ மோட்டார் விளையாட்டு சங்கத்தின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவத் தலைமயகத்தில் இடம் பெற்றது. அந்த வகையில் கோப்ரல் எச் எம் பிரேமரத்ன அவர்கள் மோட்டார் ரேசிங் 125 சிசி (2017, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில்) தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தையும் இராணுவ போட்டிகளில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். அத்துடன் தேசிய மட்டப் போட்டிகள் மற்றும் முப்படை போட்டி மட்டங்களில், சாதாரண படைவீரர் எஸ் ஏ ராஜகருண அவர்கள் சுப்பர் மோடாட் 250 சிசி (2019) போட்டிகளில் 4ஆம் இடத்தையும், சுப்பர் மோட்டார் 250 சிசி (2018) போட்டிகளில் 3ஆம் இடத்தையும், மற்றும் சுப்பர் மோட்டார் 250 சிசி (2017) போட்டிகளில் 2ஆம் இடத்தையும் சுவிகரித்துக் கொண்டுள்ளார்.மேலும் இவர்கள் இருவரும் இராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டனர்.

அந்த வகையில் சுமார் ருபா 2.5 மில்லியன் பெறுமதியிலான புதிய ரேசிங் மோட்டார் சைக்கிள்களை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இவ் வீரர்களின் எதிர்கால வெற்றிக்காக தமது வாழ்த்துக்களைக் தெரிவித்து பரிசளித்தார். இந் நிகழ்வில் இராணுவு மோட்டர் விளையாட்டு சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் வசந்த மாதோல அவர்கள் கலந்து கொண்டார். jordan Sneakers | balerínky