Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2020 19:37:20 Hours

விஷேட தேவையுடைய படை வீரர்கள் தம்பதிவ யாத்திரை நிமித்தம் பயணம்

இந்தியா 'தம்பதிவவில் உள்ள மிகவும் புனித புத்த வழிபாட்டுத் தலங்களுக்கு ஆன்மீகத் தேவைகள், ஆர்வங்கள் மற்றும் வாழ்நாள் இணைப்புகளை உன்னிப்பாகக் கருத்தில் கொண்டு, போரில் பாதிக்கப்பட்ட போர் வீராங்கனைகளில் 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இந்தியாவிற்கு யாத்திரை நிமித்தம் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆசீர்வாதத்துடன் புனர்வாழ்வு பணிப்பாளர் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இந்த விஷேட தேவையுடைய படை வீரர்களுக்கு இன்று காலை (20) ஆம் திகதி இவர்களுக்கான இலவச பயணச்சீட்டுகள் ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன.

இது சில ஆண்டுகளுக்கு முன்பு இராணுவ தளபதி இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியபோது ஆரம்பிக்கப்பட்ட புனித யாத்திரைத் திட்டத்தின் 4 வது கட்டமாகும். யாத்ரிகர்களின் குழுவில் விஷேட தேவையுடைய படை வீரர்கள் ‘மிஹிந்து செத் மெதுர’, ‘ராகம ரணவிரு செவன, ‘அபிமன்சள - 1, 2, 3’ மத்திய நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் 60 விஷேட தேவையுடைய படை வீரர்கள் இந்தியாவுக்கு யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவிற்கு செல்லவிருக்கும் யாத்ரீகர்கள், இராணுவத் தலைமையகத்தில் வரவேற்கப்பட்டு இராணுவ தளபதியுடன் குழுப்புகைப்படத்திலும் இணைந்து கொண்டனர்.

மேலும் வெவ்வேறு நலன்புரி நிலையங்களில் இருந்து வரும் விஷேட தேவையுடைய படை வீரர்கள் இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் ஏற்பாட்டில கொழும்பு 2 இல் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் எயார் டிக்கட் நிறுவனத்தின் அனுசரனையுடன் வரனாசி, போதஹயா, புதிய டில்லி போன்ற நாடுகளுக்கு எதிர்வரும் காலங்களில் சுற்றுலா நிமித்தம் அழைத்து செல்வதற்காக நலன்புரி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

வாழ்நாள் பூராக சக்கர நாற்காலியில் தங்களது வாழ்க்கையை மேற்கொண்டு செல்லும் விஷேட தேவையுடைய படை வீர ர்களுக்கான இந்த பயணத்திற்கு முழுமையான செலவு இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த விஷேட தேவையுடைய போர் வீரர்கள் இந்த மாதம் (23) ஆம் திகதி இந்த யாத்திரை பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வில் பொது நிர்வாக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டி.எஸ் பங்ஷஜயா, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே , புணர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் டப்ள்யூ.பீ.எஸ்.எம் அபேசேகர இணைந்து கொண்டனர். Asics footwear | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat