Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th February 2020 19:59:22 Hours

இராணுவ தளபதி இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் விஜயத்தோடு அமைச்சரவை கூட்டத்திலும் பங்கேற்பு

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தோடு அங்கு தற்செயலாக வருகை தந்த சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க உட்பட அமைச்சரவையின் அங்கத்தவர்கள் இம் மாதம் (17) ஆம் திகதி இராணுவ தளபதியை சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது கல்வி அமைச்சு, தகவல் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக, இராணுவ தளபதி, தொண்டர் படைத் தளபதி போன்றோர் இணைந்து கொண்டு தொண்டர் படைத் தலைமையகத்திற்கு அருகாமையில் சீதவகபுரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கான முன்மொழியப்பட்ட இடத்தை ஆய்வு செய்வதற்கு வருகை தந்த சமயத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

மேலும் இச்சந்தர்ப்பத்தில் போர்கருவி மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் துமிந்த சிறிநாக உட்பட இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sportswear Design | Releases Nike Shoes