Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ துறைசார் அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டிகள்

புத்தளையிலுள்ள இராணுவ துறைசார் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் பாடநெறி பயிற்சிகளை மேற்கொள்ளும் இராணுவ அதிகாரிகளுக்கான டி2020 கிரிக்கட் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டியானது இம் மாதம் (9) ஆம் திகதி பயிற்சி நிலைய வளாகத்தினுள் உள்ள மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியானது அணி கட்டளை பயிற்சி இல – 6, ஜூனியர் கட்டளை பயிற்சி இல – 18 மற்றும் இந்த பயிற்சி நிலையத்தின் நிரந்தர நிர்வாக பிரிவினர்களுக்கு இடையில் இடம்பெற்றது.

இந்த போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டிகளிற்கு பிரதம அதிதியாக புத்தள இராணுவ துறைசார் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்கள் வருகை தந்து வெற்றீயீட்டிய வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் வழங்கி வைத்து கௌரவித்தார்.

ஜூனியர் கட்டளை பயிற்சி பிரிவின் கெப்டனாக இராணுவ சமிக்ஞை படையணியைச் சேர்ந்த மேஜர் முதித களுவாரச்சி அவர்களது அணியினர் வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டு சிறந்து அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாவது இடத்தை போர்கருவி படையணியைச் சேர்ந்த கெப்டன் அமில ஜயசிங்க அவர்களது அணி பெற்றுக் கொண்டது.

இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டிகளில் 128 ஓட்டங்களை பெற்று சிறந்த துடுப்பாட்ட வீரனாக சமிக்ஞை படையணியைச் சேர்ந்த கெப்டன் ரஜூவ் சில்வா அவர்களும், சிறந்து பந்து வீச்சாளராக மேஜர் அமில பிரசன்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்த கிரிக்கட் போட்டிகளின் பின்பு மறுநாள் பயிற்சிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் விநோதமான ஒன்று கூடல் நிகழ்வுகளில் இணைந்து கொண்டு நாடகம் மற்றும் நடன நிகழ்வுகளை பயிற்சி நிலைய கலையரங்கத்தில் முன்வைத்தனர். பின்னர் அதிகாரி விடுதியில் பகல் விருந்தோம்பல்களில் கலந்து கொண்டனர். Nike air jordan Sneakers | Nike Air Max