Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2020 23:50:31 Hours

தியதலாவையில் தங்கியிருந்து சிகிச்சை பரிசோதனைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிப்பு

'கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான “சீனா வுஹானில் மாகாணத்தில் இருந்து இலங்கையை வந்தடைந்த 4 சிறுவர்கள் உட்பட 33 மாணவர்கள் தியதலாவை இராணுவ மருத்துவ மனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளும் இச்சந்தர்ப்பத்தில் இவர்கள் இராணுவ ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செய்தியின் போது அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமர், வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு, அமைச்சர்கள், தூதரகத்தின் பிரதிநிதிகள், இராணுவம் மற்றும் விமானப்படை தளபதிகள், இலங்கை ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அனைத்து படையினர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறப்பான ஏற்பாடுகளை பாராட்டும் முகமாக நன்றிகளை தெரிவித்தனர். மேலும் இவர்கள் இலங்கைக்கு பாதுகாப்பாக வருவதற்கு பலசிரமங்களையும், போராட்டத்திற்கு முகம் கொடுத்ததாகவும், ஒரு யுத்தத்திற்கு சமமாக இந்த வருகை நிகழ்ந்தது என்று இதற்கு உதவி வழங்கி பாரிய அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து தங்களது சிறந்த கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கை பணிகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பரிசோதனைகளை மேற்கொள்ளும் வரை அனைத்து ரீதியாவும் உதவிகளை புரிந்து எமக்கு தங்குமிட வசதிகள் மற்றும் சிறந்த விருந்தோம்பல்களையும் ஒழுங்கு செய்திருந்து, எம்மை சிறப்பாக கவனித்த படையினர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், தியதலாவையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறையிலிருந்து கையடக்க தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் கீழ்வருமாறு Sneakers Store | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival