Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th January 2020 11:47:22 Hours

இராணுவத்திலுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஒலிம்பிக்கிற்கான ஏற்பாடுகள்

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பணிப்புரைக்கமைய, விளையாட்டு வீரர்களின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், அவர்களின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், 'விளையாட்டு மற்றும் ஒலிம்பிக்கின் பார்வை' என்ற தொணிப் பொருளின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு விரிவுரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

தேசிய விளையாட்டு சம்மேளனத்தின் தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்னாயக, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் பிரதிநிதியான ஓய்வு பெற்ற குரூப் கெப்டன் திரு நலின் டி சில்வா மற்றும் ஒலிம்பிக் வீராங்கனையான செல்வி தமயந்தி போன்றோர் இராணுவத்திலுள்ள 100 விளையாட்டு வீரர்களும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் P.M.L சந்திரசிறி அவர்களது பூரன ஏற்பாட்டில கடந்த ஜனவாரி மாதம் (29) ஆம் திகதி பனாகொடையிலுள்ள இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் விளையாட்டு துறைகளின் சிறப்பு பயிற்சிவிப்பாளர்களான ஜயானி ஹேரத், திலினி ரத்னாயக, சஹார பெரேரா, தஹம் யகந்தலாவ போன்றோர் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running | Air Jordan Release Dates 2020