31st January 2020 12:06:46 Hours
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்கள் பனாகொடையில் அமைந்துள்ள இராணுவ பொறியியலாளர் படைத் தலைமையகத்தின் நிருவாக ஆய்வு மற்றும் நிலுவையில் உள்ள விடயங்களுக்கான தீர்மானம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காக, ஜனவரி 24 ஆம் திகதி தனது விஜயத்தை மேற்கொண்டார்.
இப் படையணிக்கு வருகை தந்த இவரை பிரதான நுழைவாயிற் வைத்து படையணியினரால் மரியாதை அளிக்கப்பட்டு வர வேற்கப்பட்டதோடு இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் பொறியியலாளர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களால் தலைமையக நுழைவாயிலில் அவரை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து வழக்கமான நிர்வாக ஆய்வானது இப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேலும் அனைத்து படைப் பிரிவிலிருந்தும் அதிகாரிகள் தங்கள் நிருவாக விடயங்கள் , விவாதங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதன் போது வருகை தந்த பிரதம அதிதி அவர்கள் அச் சந்தர்ப்பத்தில் அப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்தார்.
இராணுவ தலைமை பொறியியலாளர், இராணுவத்தில் உள்ள பணிப்பாளர்கள்,பொறியியலாளர் படைப் பிரிவின் படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பதவிநிலை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். Nike Sneakers Store | jordan Release Dates