02nd February 2020 23:46:31 Hours
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் வழங்கப்பட்ட அவசர உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான சீனா வுஹான் மாகாணத்தில் இருந்து வருகை தந்த 33 இலங்கை மாணவர்கள் இன்று (1) ஆம் திகதி அதிகாலை இலங்கை ஏர்லைன்ஸ் யுஎல் 1423 விமானம் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
இலங்கைக்கு வந்தடைந்த இவர்களை இராணுவ இரசாயனத் உயிரியல் கதிரியக் மற்றும் அணு குழுவினரால் வரவேற்கப்பட்டதுடன் இவர்களுக்கு இக் குழுவினரால் ஆரம்ப கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு இவர்களை 14 நாட்கள் தனிமைபடுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ள தியதலாவையில் அமைக்கபட்ட இராணுவ அடிப்படை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த திட்டமானது பதில் பாதுகாப்பு பிரதாணியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தினரால் 31 ஆம் திகதி மாலை வரையில் இந்த மாணவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள், தனிமைப்படுத்த வசதிகளை உள்ளடக்கிய 100 x 20 சதுர அடியில் இரண்டு புதிய கட்டிடங்களின் நிர்மான பணிகள் நிறைவடைந்துள்ளன, அதற்கமைய மருத்துவ ஆலோசகர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் வேறு வைத்திய அங்கத்தவர்களின் மேற்பார்வையில் கீழ் குறைந்தது 14 நாட்கள் வரை இந்த மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்கை காலத்தில், அவர்களுக்கு தேவையான உணவு,தேநீர், சுகாதாரத் தேவைகள் மற்றும் WiFi தொடர்பாடல் உட்பட அனைத்து வசதிகளும் இராணுவத்தினரால் வழங்கப்பட உள்ளன. Adidas footwear | Autres