Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2020 21:52:53 Hours

இணையத்தள பாதுகாப்பின் அவசியம் தொடர்பாக வலியுறுத்திய இராணுவத் தளபதி

‘’எதிரிகளினால் நாங்கள் தாக்கபடமாட்டோம் என நாங்கள் நம்பிக்கை வைக்காமல் அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கவேண்டும். எங்களுடைய இயலுமைகளை பயன்படுத்தி திறம்பட மற்றும் வினைத்திறனுடன் சவால்களை எதிர் கொள்ளவது காலத்தின் தேவையாகயுள்ளது. இங்கு நடைபெறுகின்ற பயிற்சியானது இணையத்தளம் பற்றிய வழிப்புணர்வு மற்றும் இராணுவத்தினருக்கிடையே அதன் பாதுகாப்பினை மேம்படச் செய்யவும் உதவும்,’’ என பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் 30 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற ‘ நிஜ யுத்தத்தின் பூச்சிய தின’’ பயிற்சியில் உரையாற்றும்போது தெரிவித்தார். இந்த பயிற்சியில் கணினி மற்றும் கணினி வலையமைப்பினூடாக விடுக்கப்படும் இணையத்தள அச்சுறுத்தல் மற்றும் அதன் பாதிப்புக்கள் மற்றும் அதற்கான சாத்தியமான உத்தியோகபூர்வமான தீர்வு அல்லது பாதிப்பை பதிவேற்றல் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.

சமிக்ஞை பிரதாணியும் இலங்கை சமிக்ஞை படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாராச்சி அவர்களின் முயற்சியினால் நடைபெற்ற இப் பயிற்சிக்கு தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தினால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. மற்றும் அதனுடைய அதிகாரிகள் மற்றும் படையினர் எதிர் தொழில் நுட்ப உபாயங்கள், இணையத்தள பாதுகாப்பு நோக்கங்கள், இணையத்தள கொள்கைகள் மற்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ‘பூச்சிய தின’மெண்பொருள் தொழில் நுட்பத்தில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான தொழில் நுட்ப முறைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தினர். பயிற்சியின் சின்னமானது பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுடன் ‘ரெட் லேன்ட் படை’ மற்றும் நீல லேன்ட் படை’ ஆகிய இரண்டு குழுவினரைக் கொண்டு போலி பயிற்சி ஒத்திகையானது அரங்கேற்றப்பட்டது.

மேலும் அங்கு உரையாற்றிய பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியவர்கள் இலங்கை சமிக்ஞை படையணியினால் முன்வைக்கப்பட்ட போதுமான காட்சியின் மூலம் எதிர் காலத்தில் ஏற்படக்கூடிய இணையத்தள அச்சுறுத்தலுக்கு எதிராக அவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டுள்ளனர். இந்த நிகழ்வை நடாத்துவதற்கு பங்காற்றிய சமிக்ஞை பிரதாணி மற்றும் அவருடைய குழுவினருக்கு நான் மனப்பூர்வமான பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

சந்ததியினர் சந்ததியினராக போரானது இடம்பெற்று வருகின்றது மற்றும் ஏவுகணைகள் கணிணி மூலம் இயக்கப்படுவதனால் இன்று வளையமைப்பு இணையத்தளம் மூலமான யுத்தமானது கூடுதலாக கவனத்தில் கொள்ளப்படுகின்றது. இணையத் தளமானது நவீன வாழ்வு முறையின் ஒரு அங்கமாகும். இந்த இணையத்தளத்தின் ஊடாக தனிநபர் மற்றும் சமூகங்கள் உலகம் முழுவதும் தங்களை தொடர்பு படுத்திக் கொள்கின்றனர் என்பது நன்கு அறிந்த உண்மை என விளக்கமளித்தார்.

‘தகவல் மற்றும் இணையத் தொடர்பு தொடர்பாக அதிகரித்து வரும் இணையத்தள பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பற்றி நாங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். இணையத்தளத்தில் இணைக்கப்பட்ட பாதுகாப்பில்லாத கணினியானது இதன் மூலம் பாதிக்கப்படும். ஆயிரக்கணக்கான வைரஸ் தாக்கங்களுக்குள்ளான வெப்தளங்கள் தினமும் கண்டுபிடிக்கப்படுகின்றன. மில்லியன் கணக்கான தகவல் பதிவானது அழிக்கப்படுகின்றன. புதிய தாக்குதல் முறைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எக்சாம் பீம்.கொம் வெப்தளத்தின் பிரகாரம் 2013 ஆம் ஆண்டு யாஹூவில் உள்ள தகவலானது அழிக்கப்பட்டன. இந்த இணையத்தள தாக்குதலில் பல பில்லியன் பாவனையாளர்களின் பாவனை முகவரிகள் கலவாடப்பட்டன. இந்த உதாரணமானது தகவல்களை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துக் காட்டுகின்றது என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் குறிப்பிட்டார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை குறித்த தொழில் நுட்ப அபிவிருத்தியானது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இராணுவ உயர் தொழில் நுட்பம் மற்றும் யுத்தத்தின் அபிவிருத்தியானது இலங்கைக்கு சமனாக செய்படுத்துவதில்லை. ஆகையால் எங்களுடைய இராணுவமானது இன்றும் நாளையும் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் மற்றும் தகவல் மற்றும் உயர் சமூக கல்வி ஆகியவற்றில் இணைந்து செயற்பட வேண்டும். இணையத்தள பாதுகாப்பின் நோக்கங்கள், இணையத்தள பாதுகாப்பின் கொள்கைகள் போன்றவற்றை பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இராணுவமானது ஏற்கனவே இணையத்தள பாதுகாப்பின் கொள்கைகள் சம்பந்தமாக அணைத்து மட்டங்களிலும் வெளியிட்டுள்ளது என தளபதி குறிப்பிட்டார்.

இன்று பிரதானமாக, முக்கியமான பதவி நிலை அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ பணிப்பாளர்கள் ஆகியோரை முன்னிலைப்படுத்தி இந்த பயற்சியானது நடாத்தப்பட்டுள்ளது என்பதை நான் அவதானித்தேன். இலங்கை இராணுவமானது தகவல்தொழில் நுட்பத்தை சரியாக பயன் படுத்த மற்றும் பாதுகாக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் இராணுவத் தளபதியவர்கள் அங்கு கலந்து கொண்டவர்களுடன் குழு புகைப்படங்களை எடுத்து சான்றிதழ்களையும் வழங்கினார்.

அனைத்து புதிய இணையத்தள அச்சுறுத்தல்களானது 5 கட்டங்களாக காணப்படுகின்றன. மக்கள், உபகரணங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றில் கலந்துள்ள ஒரு விடயமாக இந்த இணையத்தள அச்சுறுத்தல் காணப்படுவதோடு, பாதுகாப்பு அல்லது அரசு, சுகாதாரம், வணிகம் ஆகியவற்றிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. என 3 ஆவது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் அனுராத மென்டிஸ் குறிப்பிட்டார். நன்றியுரையானது 12 ஆவது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி கேணல் சானக பிரதாபசிங்க அவர்களினால் நிகழத்தப்பட்டது.

இந்த ஏற்பாட்டில் இராணுவ பதவி நிலை பிரதானி, பதவி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ தகவல் தொழில் நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் முழுமையான உரை பின்வருமாறு

‘இராணுவ வரலாற்றில் மிக விரைவாக சமிக்ஞை பிரதாணி மற்றும் அவருடைய குழுவினரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிஜ யுத்தத்தின் பூச்சிய தினம் 2020 பயிற்சிதொடர்பாக நான் மனப்பூர்வமான பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கை சமிக்ஞை பிரதானி மற்றும் போதுமான காட்சியின் மூலம் எதிர் காலத்தில் ஏற்படக்கூடிய இணையத்தள அச்சுறுத்தலுக்கு எதிராக அவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டுள்ளனர்.

‘’எதிரிகள் எங்களை தாக்கமாட்டான் என் நாங்கள் நம்பிக்கை வைக்காமல் அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கவேண்டும். எங்களுடைய இயலுமைகளை பயன்படுத்தி திறம்பட மற்றும் வினைத்திறனுடன் சவால்களை எதிர் கொள்ளவது காலத்தின் தேவையாகயுள்ளது. இங்கு நடைபெறுகின்ற பயிற்சியினாது இணையத்தளம் பற்றிய வழிப்புணர்வு மற்றும் இராணுவத்தினருக்கிடையே அதன் பாதுகாப்பினை மேம்படச் செய்யவும் உதவும்,’’ என பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் 30 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற ‘ நிஜ யுத்தத்தின் பூச்சிய தின’’ பயிற்சியில் உரையாற்றும்போது தெரிவித்தார். இந்த பயிற்சியில் கணிணி மற்றும் கணிணி வலைபிண்ணலினூடாக விடுக்கப்படும் இணையத்தள அச்சுறுத்தல் மற்றும் அதன் பாதிப்புக்கள் மற்றும் அதற்கான சாத்தியமான உத்தியோகபூர்வமான தீர்வு அல்லது பாதிப்பை பதிவேற்றல் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன. சந்ததியினர் சந்ததியினராக போரானது இடம்பெற்று வருகின்றது மற்றும் ஏவுகணைகள் கணிணி மூலம் இயக்கப்படுவதனால் இன்று வளையமைப்பு இணையத்தளம் மூலமான யுத்தமானது கூடுதலாக கவனத்தில் கொள்ளப்படுகின்றது. இணையத் தளமானது நவீன வாழ்வுமுறையின் ஒரு அங்கமாகும். இந்த இணையத்தளத்தின் ஊடாக தனிநபர் மற்றும் சமூகங்கள் உலகம் முழுவதும் தங்களை தொடர்பு படுத்திக் கொள்கின்றனர் என்பது நன்கு அறிந்த உண்மை என விளக்கமளித்தார்.

‘தகவல் மற்றும் இணையத்தொடர்பு தொடர்பாக அதிகரித்து வரும் இணையத்தள பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பற்றி நாங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். இணையத்தளத்தில் இணைக்கப்பட்ட பாதுகாப்பில்லாத கணினியானது இதன் மூலம் பாதிக்கப்படும். ஆயிரக்கணக்கான வைரஸ் தாக்கங்களுக்குள்ளான வெப்தளங்கள் தினமும் கண்டுபிடிக்கப்படுகின்றன. மில்லியன் கணக்கான தகவல் பதிவானது அழிக்கப்படுகின்றன. புதிய தாக்குதல் முறைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எக்சாம் பீம்.கொம் வெப்தளத்தின் பிரகாரம் 2013 ஆம் ஆண்டு யாஹூவில் உள்ள தகவலானது அழிக்கப்பட்டன. இந்த இணையத்தள தாக்குதலில் பல பில்லியன் பாவனையாளர்களின் பாவனை முகவரிகள் கலவாடப்பட்டன. இந்த உதாரணமானது தகவல்களை பாதுகாப்பதன அவசியத்தை எடுத்துக் காட்டுகின்றது என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் குறிப்பிட்டார்.

மதிப்பிற்குறிய ஆண்கள் மற்றும்பெண்களே

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை குறித்த தொழில் நுட்ப அபிவிருத்தியானது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இராணுவ உயர் தொழில் நுட்பம் மற்றும் யுத்தத்தின் அபிவிருத்தியானது இலங்கைக்கு சமனாக செய்படுத்துவதில்லை. ஆகையால் எங்களுடைய இராணுவமானது இன்றும் நாளையும் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் மற்றும் தகவல் மற்றும் உயர் சமூக கல்வி ஆகியவெற்றில் இணைந்து செயற்பட வேண்டும்.

இணையத்தள பாதுகாப்பின் நோக்கங்கள், இணையத்தள பாதுகாப்பின் கொள்கைகள் போன்றவற்றை பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இராணுவமானது ஏற்கனவே இணையத்தள பாதுகாப்பின் கொள்கைகள் சம்பந்தமாக அணைத்து மட்டங்களிலும் வெளியிட்டுள்ளது என தளபதி குறிப்பிட்டார். இன்று பிரதானமாக முக்கியமான பதவி நிலை அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ பணிப்பாளர்கள் ஆகியோரை முன்னிலைப்படுத்தி இந்த பயற்சியானது நடாத்தப்பட்டுள்ளது என்பதை நான் அவதானித்தேன். இலங்கை இராணவமானது தகவல்தொழில் நுட்பத்தை சரியாக பயன் படுத்த மற்றும் பாதுகாக்க தெரிந்திருக்க வேண்டும்.

இறுதியாக நான் இவ்விழிப்புணர்வு நிகழ்வை நடாத்திய சமிக்ஞை பிரதாணி மற்றும் அவருடைய குழுவினருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரி, அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையம், இலங்கை இராணுவக் கல்லூரி மற்றும் பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் ஆகிய இடங்களில் இந்த நிகழவை நடாத்த நான பரிந்துரை செய்கிறேன். affiliate link trace | Sneakers