Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th January 2020 10:47:22 Hours

5 ஆவது இலங்கை பொலிஸ் படையணியில் ஜிம்னாசியம் மற்றும் பூபந்து கட்டிடம் திறந்து வைப்பு

கிளிநொச்சியில் அமைந்துள்ள 5 ஆவது இலங்கை பொலிஸ் படையணியில் உள்ள படையினரின் நலன் கருதி புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஜிம்னாசியம் மற்றும் பூபந்து கட்டிடம் இம் மாதம் (27) ஆம் திகதி திங்கட் கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு 5 ஆவது இலங்கை பொலிஸ் படையணியில் கட்டளை தளபதி லெப்டினன் கேணல் எச்.ஏ.எச்.சி அல்விஸ் அவர்களின் அழைப்பை ஏற்று வினியோக கட்டளை தளபதியும் இலங்கை பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் .டி .கே.ஜி.டி சிரிசேன அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதி அவர்களால் ரிபன் வெட்டி ஜிம்னாசியம் மற்றும் உட்புற பூ பந்து கட்டிடம் இரண்டையும் படையினர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. bridgemedia | adidas Campus 80s South Park Towelie - GZ9177