Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th January 2020 21:55:00 Hours

11 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினருக்கு தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி பட்டறை

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 11 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் படையினருக்கும் பொது மக்களுக்கும் தேனீ வளர்ப்பு தொடர்பான விரிவுரைகள் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவுரையானது பல்லேகலையில் உள்ள 11 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் (22) ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றதுடன், இந்த நிகழ்வில் 10 அதிகாரிகள் உட்பட 110 இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த விரிவுரையானது 11 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் வழிக்காட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விரிவுரையானது ‘பிங்கு சம்பத் பாதுகாப்பு அமைப்பின்’ செயலாளர் திரு திஸ்ஸா பண்டார அவர்களால் வழங்கப்பட்டன. Authentic Sneakers | Entrainement Nike