Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2020 19:20:46 Hours

வன்னி படையினரால் 72 மணி நேரத்தின் தேடல் நடவடிக்கைகளில் கைப்பற்றபட்ட 35 கிலோ கஞ்சா போதைபொருள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 561 மற்றும் 563 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 16 ஆவது சிங்கப் படையணியின் படையினரால் மற்றும் பொலிஸாரும் இம் மாதம் (25-27 ஜனவரி) ஆம் திகதிகளில் 3 நாள் சோதனை தேடுதல் நடவடிக்கைகள் புத்தூர் சந்தி மற்றும் ஓமந்த ஆகிய இடங்களில் மேற்கொண்டன. இந்த சோதனை நடவடிக்கைகளில் 35.55 கிலோ கேரள கஞ்சா உடன் பேருந்துகளில் இருந்து 8 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அதற்கமைய படையினரால் மானிங் சாலை தடுப்பில் யாழில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் ஏ 9 சாலையில் தேடுதல் நடவடிக்கையின்போது இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளில் இருந்து கஞ்சா மீட்கப்பட்டது.

மேலும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட இ.போ.ச பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோ கஞ்சா சனிக்கிழமை (25) ஆம் திகதி இரவு 9.20 மணியளவில் புத்தூர் சந்தி சாலைத் தடுப்பில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சுமார் இரண்டரை மணி நேரத்தின் பின்னர் இரவு 11.40 மணியளவில் அதே சாலைத் தடுப்பில் ஒரு தனியார் பேருந்தில் படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது 2.5 கிலோ கஞ்சாவுடன் கைது செய்தனர். இதேபோல் (26) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.40 மணியளவில் புத்தூர் சந்தியில் வைத்து மற்றொரு தனியார் பேருந்தில் இருந்து 7 கிலோ கஞ்சாவை படையினர் கண்டுபிடித்தனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை (26) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.35 மணியளவில், அதே 16 ஆவது சிங்கப் படையணியினரால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் மற்றொரு இ.போ.ச பேருந்தில் இருந்து 2.5 கிலோ கஞ்சா மீட்கப்பட்டன. அதே தினத்தில் (26) ஆம் திகதி காலை 9.40 மணியளவில், புத்தூர் சந்தியில வைத்து திடீர் தேடுதலின் நடவடிக்கையின் போது யாழ் - கண்டி நோக்கி மாலை 4.45 மணிக்கு பயணித்த பேருந்தில் மறைத்து வைக்கப்பட்ட சந்தேகத்தின் பேரில் படையினரால் மேலும் 5 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டன. மாலை 6.15 மணியளவில் அதேபோல் 16 ஆவது சிங்கப் படையணியினரால் புத்தூர் சோதனை சாவடியில் வைத்து யாழிலிருந்து அக்கரைப்பற்று வரைக்கு பயணத்தை மேற்கொண்ட பேருந்து வண்டியிலிருந்து 5 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டன. மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு 7.10 மணியளவில், புத்தூர் சோதனையின் போது யாழிலிருந்து புறப்பட்ட மற்றொரு தனியார் பஸ்ஸில் படையினர்களின் தேடுதலில் சுமார் 600 கிராம் கஞ்சா மீட்கப்பட்டன. அத்துடன் மாலை 6.15 மணியளவில் (26) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழிலிருந்து அக்கரைப்பற்று வரைக்கு பயணத்தை மேற்கொண்ட பேருந்து வண்டியிலிருந்து 2.5 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டன.

அதன்படி 21 ஆவது சிங்கப் படையணியினரால் இம் மாதம் (26) ஆம் திகதி ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து 10.55 மணியளவில் 4.13 கிலோ கேரள கஞ்சாக்கள் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி வந்த பேருந்தி வண்டியிலிருந்து கைப்பற்றப்பட்டன. இதேபோல், (26) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் படையினரால் யாழிலிருந்து வவுனிய நோக்கி சென்ற தனியார் பேருந்தில் இருந்து 950 கிராம் கேரள கஞ்சாவை ஓமந்த சாலைத் தடையில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டன.

திங்கள்கிழமை (27) ஆம் திகதி 21 ஆவது சிங்கப் படையணியினரால் ஓமந்த சாலைத் தடையில் கண்டிக்குச் செல்லும் இ.போ.வ பேருந்தில் தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 140 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டன. மீண்டும், இன்று (27) ஆம் திகதி காலை 9.35 மணியளவில், ஓமந்த சாதனை சாவடியில் வைத்து அதே படையினரால் பூனரினிலிருந்து வவுனியாவுக்குச் செல்லும் ஒரு தனியார் பேருந்தில் இருந்து 661 கிராம் கஞ்சா பொதியுடன் கைது செய்தனர்.

இந்த சோதனை நடவடிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்கள் புலியங்குளம் மற்றும் ஓமந்த காவல் நிலையங்களில் மேலதிக விசாரணைகள் மற்றும் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய நாட்டிலிருந்து போதைப் பொருள் ஒழிப்பை தடுக்கும் திட்டத்தின் கீழ் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பணிப்புரைக்கமைய படையினரால் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த சட்ட விரோதமான பொருட்கள் மீட்கப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி, 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி ஜாலிய சேனாரத்ன, 561 மற்றும் 563 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன தலைமையில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. buy shoes | nike fashion