24th January 2020 20:30:45 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிரி அவர்கள் பூ ஓயாவில் அமைந்துள்ள பொறியியலாளர் படைப் பிரிவுக்கு 2020 ஜனவரி மாதம் (25) ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இப் படைப் பிரிவுக்கு வருகை தந்த வன்னி பாதுகாப்பு படைத் தளபதியை பொறியியலாளர் படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ.என் அமரசேகர அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, பொறியியாலாளர் படையணியின் பங்கு மற்றும் பணிகள் தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கினார். அத்துடன் அவரின் வருகைக்கு இணையாக மரக்கன்றும் நடப்பட்டன.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். Nike shoes | Jordan Shoes Sale UK