Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th January 2020 15:14:31 Hours

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான “அயத்தி” சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

ராகமையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக அனைத்து வகையான மருத்துவ வசதிகளுடன் இராணுவ படையினரால் முதன்முதலாக நிர்மாணிக்கப்பட்ட நவீன மறுவாழ்வு சிறுவர் பாதுகாப்பு நிலையமான “அயத்தி“ கட்டிடம் ஜனவரி மாதம் (25) ஆம் திகதி பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டி.எம்.செமசிங்க மற்றும் களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் டீன் பேராசிரியர் பி.எஸ்.விஜேசிங்க மற்றும் அயத்தி நிலையத்தின் பேராசிரியர் நிலந்தி டி சில்வா அவர்களின் அழைப்பை ஏற்று அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார். அதற்கமைய நிலையத்தின் மற்றும் அறங்காவலர் குழுவினர்களுடன் மருத்துவ குறைபாடுகள் உள்ள விசேட தேவையுடைய இரண்டு சிறுவர்கள் இணைந்து பிரதம அதிதியை வரவேற்றனர்.

தொடர்ந்து விசேட தேவையுடைய இரண்டு சிறுவர்களுடன் இணைந்து ஜனாதிபதி அவர்கள் சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கு ஏற்றினார். பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டதுடன், களனி பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டி.எம். செமசிங்க அவர்கள் வரவேற்புரை வழங்கப்பட்டது.

மேலும், விசேட தேவையுடைய ஒரு சிறுவனால் உணர்ச்சி மற்றும் இதயத்தைத் தொடும் வகையில் ‘மை லைஃப் ஸ்டோரி’ யை விவரிக்கும் தேசிய பிரச்சினை மற்றும் அனைவரின் கவனத்தின் அவசியத்தையும் சித்தரிக்கும் வகையில் ஒரு உணர்வுபூர்வமான பேச்சு, அனைவரின் மனதையும் கவர்ந்தது.

அயத்தி நிலைய பணிப்பகத்தின் நிர்வாக பணிப்பாளர் திருமதி ஷிரோமி மாசகோரலா அவர்களால் டவுன் நோய்க்குறி (அதனுடன் தொடர்பான கோளாறுகளின் மரபணு மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடு) மற்றும் மன இறுக்கம் (மன இறுக்கம் கொண்ட குழந்தைகளின் நோய் அறிகுறிகள்) நோய்களின் சிறப்பு சிகிச்சை தொடர்பான சுருக்கமான விரிவுரை, விரிவான விளக்கக்காட்சி விரிவுபடுத்தப்பட்டது. பின்னர், அயத்தி நிலையத்தின் பேராசிரியர் நிலந்தி டி சில்வா அவர்களால் நன்றியுரையும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அயத்தி நிலையத்தின் நினைவு பலகை “திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், சிறுவர்களிடம் கலந்துரையாடினார். ஜனாதிபதியின் ஆலோசகர், முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பேராசிரியர் டி.எம்.செமசிங்க, பேராசிரியர் விஜேசிங்க, பேராசிரியர் நிலந்தி டி சில்வா, பேராசிரியர் சமன்மாலி, திருமதி ஷிரோமி மாசகோரலா, திரு ரோஷான் மஹானாம, திரு லலித் வீரதுங்க ஆகியோருடன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, பிரதி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சத்தியப்ரிய லியனகே மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

ஆலோசனை அறைகள், கற்றல் அறைகள், எஸ்.எல்.டி பிரிவு குழு சிகிச்சை மற்றும் சி.வி.ஐ அறை,செவி தொடர்பான ஆய்வு பிரிவு, ஆய்வகம், இசை அறை, உணர்ச்சி ஒருங்கிணைப்பு அறை மற்றும் ஒரு சில பிரிவுகளை ஜனாதிபதி அவர்கள் மறுபரிசீலனை செய்தும் பார்வையிட்டார். நிகழ்வின் இறுதியில் நினைவின் அடையாளமாக அனைவருடன் குழு புகைப்படங்களிலும் கலந்துகொண்டார்.

ராகமை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நிர்மாணிக்கப்பட்ட ‘அயத்தி’ நிலையத்திற்காக 55 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும் சேவைகளை இலவசமாக வழங்க வேண்டியிருப்பதால், நடைப்பெற்றுகொண்டிருக்கும் செயல்பாடுகளுக்கு நிலைத்தன்மைக்கு கூடுதல் நிதி தேவைப்படும். அதன் காரணமாக சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக கூடுதல் நிதி திரட்டுவதற்கு ‘அயத்தி’ நிலையம் தொடர்ந்து செயல்படுகின்றது என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் 10 ஆவது தொண்டர்) பொறியியலாலர் சேவை படையணியின் படையினர்களால் களனி பல்கலைக்கழக மருத்துவ பீடம் வளாகத்தில் மூன்று மாடி கட்டிட நிர்மாண பணிகள் ஆரம்பிப்பதுக்கு முன் 'அயத்தி' நிலையத்தினரால் நிதி வழங்கப்பட்டது. இன்று (25) ஆம திகதி முதல் அனைத்து குழந்தைகளின் நலனுக்காக இலவசமாக இந்த நிலையம் இயங்குகின்றது.

இலங்கை இராணுவம், மருத்துவ பீடம், களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி, எம்.ஏ.எஸ் ஹோல்டிங்ஸ், ரோட்டரி இன்டர்நேஷனல், எம்.ஐ.சி.டி கட்டிடக் கலைஞர்கள், விக்ரமசிங்க அசோசியேட்ஸ், E&Y,, மக்கள் வங்கி, People’s Leasing, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் கம்பெனி லிமிடெட், பிராண்டிக்ஸ், Goodness மற்றும் முப்படையினர் இந்த திட்டத்தின் முக்கிய பங்களர்களாவர். அந்த குழந்தைகளின் வாழ்க்கைத் தரம், சுதந்திரம் மற்றும் முழு திறன், உள்ளார்ந்த வலிமை மற்றும் தனிப்பட்ட திறமைகளை மேம்படுத்துதல், குறைபாடுகள் உள்ள குழந்தைகளிடையே உள்ளார்ந்தவர்கள், நாட்டில் இதுபோன்ற குழந்தைகளின் (20%) சதவீதம் உடல் அல்லது உள குறைபாடுகளை கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அயத்தி எனும் பெயருக்கு சமஸ்கிருதத்தில் ‘நம்பிக்கை’ என்று பொருள்படும் ’அத்தகைய குழந்தைகளின் மறுவாழ்வுக்காக தேசிய நிலையமாக செயல்படும்.

இந்த நிலையத்தை இலங்கை இராணுவத்தினரின் முழு முயற்சியினால் 13 மாதங்களுக்கு நிர்மாணிக்க முடிந்தது. மூன்றாவது முக்கிய நன்கொடையாளராக ‘ரோஷன் விஜராம குடும்ப அறக்கட்டளை’யினால் ரோட்டரி செவி கேட்டல் பற்றிய ஆய்வு கருவிகள் வழங்கப்பட்டன. ‘அயத்தி’ நிலையம் இப்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய திறக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் சேவைகளை இலவசமாக வழங்கும்.

மேலும் இதன் மருத்துவ பரிசேதனைகள் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துடன் இணைக்கப்பட்ட உயர் தகுதி வாய்ந்த தொழில்முறை நிபுணர்களால் நடத்தப்படும். இந்த நிலையம் சேவை வழங்குவதை உறுதி செய்வதற்கு முன் நியமனங்கள் அவசியம். வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 0115960050 என்ற தொலைபேசி எண்ணில் அழைப்பதன் மூலம் நியமனங்கள் பெற்றுகொள்ளால். Running sport media | Nike sneakers