Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2020 14:13:38 Hours

இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதிக்கு இராணுவ தலைமையகத்தில் வரவேற்பு

இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதியான அத்மிரால் சபார் மகமூட் அபாஷி அவர்கள் இன்று (27) ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதியை இராணுவ தலைமையகத்தின் பட்டாலியன் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் இந்திக பெரேரா அவர்கள் தலைமையக நுழைவாயிலில் வைத்து வரவேற்று பின்னர் இலங்கை இராணுவ படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

பின்னர் இலேசாயுத காலாட் படையணிக்குரிய ‘கன்டுல’ யானையினால் இவருக்கு மரியாதைகள் செலுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து கடற்படைத் தளபதியினால் இந்த யானைக்கு பழங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இராணுவ தளபதி பணிமனை நுழைவாயிலில் வைத்து இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் B.V.D.P அபேநாயக அவர்களினால் வரவேற்கப்பட்டு பின்னர் பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்திப்பதற்காக அழைத்து செல்லப்பட்டார்.

பின்பு இராணுவ தளபதியின் பணிமனைக்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றார். அதனை தொடர்ந்து இராணுவ தலைமையகத்திலுள்ள மூத்த இராணுவ உயரதிகாரிகளை இராணுவ தளபதியவர்கள் பாகிஸ்தான் கடற்படைத் தளபதியவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். .

இலங்கை இராணுவ தளபதி மற்றும் பாகிஸ்தாஸ் கடற்படைத் தளபதிக்கு இடையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது பரஸ்பர ஆர்வம், கடல்சார் பிரச்சினைகள், கடல் வழித்தடங்களில் உள்ள சவால்கள் மற்றும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை பாதுகாப்பு படையினர்களுக்கு இடையிலுள்ள ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் பின்னர் இராணுவ தளபதி அவர்களினால் பாகிஸ்தான் கடற்படைத் தளபதிக்கு அவரது வருகையை கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னம் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார். இறுதியில் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கடற்படைத் தளபதி கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார்.

இலங்கை கடற்படைத் தளபதி வயிஷ் அத்மிரால் பியல் டி சில்வா அவர்களது அழைப்பையேற்று இம் மாதம் 25 – 29 ஆம் திகதி வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை கொண்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதியவர்கள் இலங்கையின் பிரதமரான கௌரவத்திற்குரிய மஹிந்த ராஜபக்‌ஷ, பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை சந்தித்தார்.

பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாத் அலி மற்றும் துணைப் பணியாளர்கள், மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் குழுவினரும் இணைந்திருந்தனர்.

இவர் பாகிஸ்தான் கடற்படைத் தளபதியாக 2017 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 7 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

இவர் பாகிஸ்தான் கடற்படையில் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் எகடமியில் இணைந்து கொண்டு டார்மவுத் பிரித்தானிய இராஜகிரிய கல்லூரியில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

கடற்படைத் தளபதி அவர்கள் சிறந்த பயிற்சி மற்றும் கட்டளை பணிகளின் பரந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார். அவரது கட்டளை நியமனங்களில் ஒரு எம்.சி.எம்.வி (பி.என்.எஸ் முஜாஹித்), டிஸ்ட்ராயர் (பி.என்.எஸ் கைபார்), 25 வது அழிக்கும் படை, கமாண்டன்ட் பாகிஸ்தான் கடற்படை எகடமி, கொமாண்டர் பாகிஸ்தான் கடற்படை, கொமாண்டர் கடலோர பகுதி, கொமாண்டர் லாஜிஸ்டிக்ஸ், டி.ஜி. CTF-150). ஃப்ளீட் டார்பிடோ மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு அதிகாரி, கடற்படை போர் செயல்பாட்டுத் திட்டங்கள், கடற்படைப் பணியாளர்களின் உதவித் திட்டங்கள் (திட்டங்கள்), தலைமை ஆய்வாளர் (கடற்படை) மற்றும் கடற்படைத் துறை துணைத் தலைவர் (செயல்பாடுகள்) அவரது முக்கிய பணியாளர் நியமனங்களில் சில முக்கிய பதவிகளையும், கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அட்மிரல் இஸ்லாமாபாத்தில் உள்ள கடற்படை தலைமையகத்தில் தலைமைத் தளபதியாக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் இராஜகிரிய அவுஸ்திரேலிய கடற்படை பணியாளர் கல்லூரியில் பட்டம் பெற்றவர். அவர் இஸ்லாமாபாத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஆயுதப்படை போர் பாடத்தில் தகுதி பெற்றுள்ளதுடன், இஸ்லாமாபாத்தின் காயிட்-இ-அசாம் பல்கலைக்கழகத்தில் போர் ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்ற அதிகாரியாவார்.

அவரது சிறப்பான சேவைகள் மற்றும் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில், அத்மிரலுக்கு நிஷான்-இ-இம்தியாஸ் (இராணுவம்), ஹிலால்-இ-இம்தியாஸ் (இராணுவம்) மற்றும் சீதாரா-இ-இம்தியாஸ் (இராணுவம்) பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவருக்கு 'கிங் அப்துல் அஜீஸ் மெடல் ஆஃப் எக்ஸலன்ஸ்' (சவுதி அரேபியா) மற்றும் 'தி லெஜியன் ஆஃப் மெரிக் (துருக்கி) ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. இவர் திருமணமாகி இரண்டு மகள்களும், ஒரு மகனும் இவருக்கு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.spy offers | Nike Running