21st January 2020 12:40:22 Hours
மன்னார் பிரதேசத்தில் ‘துரு மிதுரு நவ ரடக்’ எனும் தொணிப் பொருளின் கீழ் இலங்கை இராணுவம் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் இணைந்து மரநடுகை திட்டத்தின் கீழ் 250 மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன.
கும்புக் மற்றும் மீ மரங்கள் மன்னார் பொது பிரதேசங்களில் மரநடுகைத் திட்டத்தின் கீழ் நாட்டப்பட்டன.
மின்சார சபை கட்டுமான மற்றும் நிறுவல் திட்டங்களுக்காக அகற்றப்பட்ட வனப்பகுதியை நிரப்புவதற்காகவும் அவர்களின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த மரக்கன்று நடுவு திட்டத்தை மின்சார சபை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த மரநடுகைத் திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களது வழிக்காட்டலின் கீழ் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சுபாஷன வெலிகல அவர்களது தலைமையில் இலங்கை மின்சார சபையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டன.
இராணுவத்தைச் சேர்ந்த 25 இராணுவ அங்கத்தவர்களதும், மின்சார சபை அங்கத்தவர்களது பங்களிப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best shoes | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes