Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th January 2020 13:28:41 Hours

பூட்டான் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் வருகை

பூட்டானைச் சேர்ந்த 20 விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் இம் மாதம் (19) ஆம் திகதி இலங்கைக்கு வருகையை மேற்கொண்டனர்.

ஆசியா கால்பந்தாட்ட கிண்ண போட்டிகள் இராணுவ விளையாட்டு கழகத்துடன் டிபென்டர்ஷ் ‘ஏஎப்சி’ கழகம் இம் மாதம் (21) ஆம் திகதி கொழும்பு குதிரைத்திடல் மைதானத்தில் ஆடவுள்ளது.

டயலொக் சம்பியன்ஸ் லீக் 2019 இல் டிஃபெண்டர்ஸ் கால்பந்து கிளப் தேர்வு செய்யப்பட்டதன் நிமித்தம் இருமுறை இராணுவ விளையாட்டு கழகத்துடன் போட்டியிட்டுள்ளனர்.

இந்த போட்டிகள் அனைத்தும் AFC விதிமுறை ஒப்பந்தத்துடன் நடாத்தப்பட்டது. இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் டிபென்டர்ஷ்ச எஃப்சி இந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.

மேலும், ஈரானில் இருந்து 4 நடுவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள், அத்துடன் ஜோர்தானியர் போட்டி ஆணையராக பங்கேற்றிக் கொள்வார்.

இலங்கையின் டிபென்டர்ஷ் எஃப்சி 18 வீரர்கள் மற்றும் 3 வெளிநாட்டு வீரர்களைக் உள்ளடக்கியிருந்தது. நைஜீரியாவைச் சேர்ந்த 2 பேரும் கனடாவைச் சேர்ந்த ஒரு நபரும் பங்கேற்றிக் கொண்டனர்.

இராணுவத் தளபதி மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளன அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின் கீழ் இந்த போட்டியானது பிரிகேடியர் உபாலி குணசேகர அவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

AFC கோப்பை என்பது ஆண்டுதோறும் கழக கால்பந்து போட்டியை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஏற்பாடு செய்திருந்தது. அதன் தற்போதைய விதிகளின் கீழ், ஏஎஃப்சி கிளப் போட்டிகளின் தரவரிசை அடிப்படையில், ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் முதலிடத்தில் நேரடி தகுதி இடங்களைப் பெறாத நாடுகளின் கழகங்களுக்கு இடையே போட்டி முக்கியமாக விளையாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sportswear free shipping | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ