Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2020 13:59:59 Hours

ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் குமாரப்பெரும அவர்களுக்கு இராணுவத் தளபதி கௌரவிப்பு

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறும் உயர் அதிகாரிகளுக்கான பாராட்டுக்களை வழங்கும் முகமாக பதில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் 65ஆவது படைத் தலைமையக தளபதியாக காணப்பட்ட இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் வசந்த குமரப்பெரும அவர்களுக்கான பாராட்டுக்களை வழங்கியதுடன் இந் நிகழ்வானது செவ்வாயக் கிழமை (14) இராணுவத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் கிட்டத் தட்ட மூன்று தஸாப்த காலமாக இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் வசந்த குமரப்பெரும அவர்களுக்கான பாராட்டுக்களை பதில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்ததுடன் கடந்த கால சேவைகள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடினார்.

இந் நிகழ்வின் இறுதியில் பதில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் இவ் உயர் அதிகாரிக்கான விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன் இவர் இராணுவத் தளபதியவர்களுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தார்.

அந்த வகையில் சிங்கப் படையணியைச் சேர்ந்ந மேஜர் ஜெனரல் வசந்த குமரப்பெரும அவர்கள் தமது இராணுவ சேவைக் காலத்தின் போது படைப் பிரிவுகள் மற்றும் தலைமையகங்களில் பலவாறான சேவைகளை மேற்கொண்டுள்ளார். Sportswear Design | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ