08th January 2020 20:14:46 Hours
இந்திய இராணுவத்தின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர்கள் தியதலாவையில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி கட்டளை தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர். இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான பயற்சி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
இந்திய இராணுவ வனபோர் பயிற்சி பாடசாலையின் பிரதி கட்டளை தளபதியான பிரிகேடியர் சலிம் அசிப் மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் இம் மாதம் 06 ஆம் திகதி இலங்கைக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கெண்டனர்.
மேலும்,இச்சந்திப்பின் போது தியதலாவை இராணுவ அகடமியில் இலங்கை இராணுவத்தின் வனபோர் பயிற்சிகள், நடவடிக்கை பயிற்சிகள்தொடர்பான விடயங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
இந்தியாவிலிருந்து வருகை தந்த இராணுவ உயரதிகாரிகளை இராணுவ பயிற்சி கட்டளையின் கட்டளை தளபதியும், இராணுவ பொது நிர்வாக பிரதானியுமான மேஜர் ஜெனரல் டி.எஸ் பங்ஷஜயா அவர்கள் வரவேற்றார். இச்சந்தர்ப்பத்தில் கருத்து மற்றும் கண்காணிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சந்திர ஜயவீர அவர்களும் இணைந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது இந்திய இராணுவ அதிகாரிகள்உலகமயமாக்கப்பட்ட மற்றும் வலையமைப்பில் வலையமைக்கப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான தங்கள் கருத்துக்களையும் சவால்களையும் முன்வைத்தனர். மேலும் இந்திய இராணுவ அதிகாரிகளால் மோதல்களில் சவால்கள்-விதிக்கப்பட்ட தொழில்நுட்பத்தையும், களத்தில் செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது தொழில்நுட்பத்தை இணைப்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்தனர்.ஒவ்வொரு விளக்கக்காட்சியும் விரைவில் கலந்துரையாடல்களின் போது நீளமான சொற்பொழிவுகள் மற்றும் வாய்மொழி விளக்கங்கள் தொடர்பாகவும் இரு தரப்பினரும் தங்கள் சந்தேகங்களையும் கேள்விகளையும் தெளிவுபடுத்தி கலந்துரையாடினர்.
மேலும், இராணுவ பயிற்சிகள் உலகளாவிய மற்றும் உள்ளூர் ரீதியாக போர் பற்றிய விரிவான விளக்கங்களை விரிவு படுத்தினர்.மேலும்போர் பற்றிய இலங்கை அனுபவம்: 1971 மற்றும் 1987/89 ஆம் ஆண்டில் ஜேவிபி கலவரங்கள் மற்றும் எல்ரீரீஈ பயங்கரவாத தாக்குதல் தோல்வியடைவு தொடர்பாகவும் பல கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும் இந்த கலந்துரையாடலின் போது, விஜயம் செய்த இந்திய இராணுவ அதிகாரிகள் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் இரானுவ வெற்றியைப் பற்றி அதிகம் கலந்துரையாடியதுடன், மூலோபாயத்தைப் பற்றியும் விவாதித்தனர்.செயல்பாடுகள் மற்றும் தந்திரோபாய சவால்கள், அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் இலங்கை இராணுவம் எதிர்கொண்டது. இதேபோல் இந்திய இராணுவ அதிகாரிகள் இந்தியாவிலும் இதுபோன்ற அனுபவங்களையும் மிகவும் ஆர்வமாக பகிர்ந்து கொன்டனர்.
இந்த இரண்டு நாள் விஜயத்தின் போது இராணுவத் தளபதியை பிரதிநிதித்துவ படுத்தி இலங்கை இராணுவ பயிற்சி கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவ பேன்ட் மற்றும் கலைப் பிரிவு பணியகத்தின் ஏற்பாட்டில் கலாச்சார நிகழ்வுகள் தியதலைவை ஹொல்ப் விடுதியில் இந்த அதிகாரிகளுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. latest Running Sneakers | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4