Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th January 2020 10:52:55 Hours

மட்டக்களப்பில் இடம்பெற்ற பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

23ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தின் படைத் தளபதியவர்களின் வேண்டுகோளிற்கமைவாக, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தினால் மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள 183 தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொதிகள் ஆகியன சியோன் தேவாலயத்தில் வைத்து திங்கட் கிழமை 30ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்ணான்டோ அவர்களின் ஆசிர்வாத்த்துடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரையறுக்கப்பட்ட ஹேமாஸ் மருந்து தனியார் நிறுவனத்தின் தலைவர்,231ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி ஜே.எஸ்.பி.டபல்யு பல்லேகும்புர மற்றும் சில அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக் குறித்த பரிசுப் பொதிகளில் பயிற்சி புத்தகங்கள்,பென்சில்கள்,சின்னங்கள் ,பாடசாலை பைகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பல பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. Nike air jordan Sneakers | 『アディダス』に分類された記事一覧