Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st January 2020 10:25:45 Hours

இராணுவத்திற்கு உலருணவு வகைகளை விநியோகிக்கும் விநியோகிப்பாளர்கள் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை இராணுவத்திற்கான உலருணவு வகைகளை விநியோகிக்கும் விநியோகிப்பாளர்கள் 2020 ஆம் ஆண்டிற்கு இராணுவத்திற்கு தரமான உலருணவு வகைகளை விநியோகிப்பது தொடர்பாக பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இராணுவத்திற்கு உலருணவு வகைகளை விநியோகிக்கும் 14 விநியோகிப்பாளர்கள், இராணுவத்திற்கு தரமானதும் சிறந்த உலருணவு வகைகளை விநியோகிப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இராணுவத்திற்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, மசாலா, எண்ணெய், மீன், பழங்கள், முட்டைகள், , காய்கறிகள், பால், இறைச்சி போன்ற உணவு வகைகளை விநியோகிக்கும் விநியோகிப்பாளர்கள் இந்த சந்திப்பின் போது பங்கேற்றிக் கொண்டனர்.

சுமுகமான இந்த சந்திப்பின் போது லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள், நாட்டின் பாதுகாப்பு, அவசரநிலைகள் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் அர்ப்பணிப்பான சேவைகளையாற்றும் இராணுவ வீரர்களுக்கும் சிறந்த உணவுப் பொருட்களைப் வழங்குவது தொடர்பான அவசியத்தை அந்த விநியோகிப்பாளர்களுக்கு விளக்கி இவர்களுக்கு தரமான உலருணவு வகைகளை விநியோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் இச்சந்திப்பின் போது இராணுவ விநியோகம் மற்றும் போக்குவரத்து பணியகத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் இரோஷ் வனிகசேகர உட்பட இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த 7 கட்டளை அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Running sport media | Jordan Ανδρικά • Summer SALE έως -50%