Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2019 15:06:34 Hours

புதிய இராணுவ தலைமையக செயலாளராக மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே நியமிப்பு

கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பி. ஜயசாந்த கமகே அவர்கள் இராணுவ தலைமையகத்தின் புதிய செயலாளர் நாயகமாக இம் மாதம் (24) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

இராணுவ சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்குகள் ஏற்றி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக கடமை வகித்து தற்பொழுது இராணுவ செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத்தில் 33 வருடங்கள் சேவை புரிந்து இராணுவத்தில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தில் 1986 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 16 ஆம் திகதி இராணுவத்தில் இணைந்து கெடெற் பயிற்சிகளின் பின்பு கஜபா படையணியில் இரண்டாம் லெப்டினனாக இணைந்து கொண்டார்.

முன்னாள் இராணுவ செயலாளரான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்கள் இலங்கை இராணுவத்தில் 34 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளமையால் இவரது பதவிக்கு மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே நியமிக்கப்பட்டார்.

இவரது பதவியேற்பு நிகழ்வில் இராணுவ தலைமையகத்திலுள்ள பணிப்பாளர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். url clone | Mens Flynit Trainers